சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்கி சாமியார் ஆசிரமத்தில் திடீர் ரெய்டு.. 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை

கல்கி ஆசிரமத்தில் திடீர் ரெயிடு நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: செக்ஸ் லீலைகள் நடப்பதாக அடிக்கடி சர்ச்சை கிளம்பும் கல்கி ஆசிரமத்தில் இன்று அதிரடியாக ரெய்டு நடந்து வருகிறது.

ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.

it raid in kalki ashram

இவர் ஆரம்பத்தில் எல்ஐஏசி ஏஜெண்டாக இருந்தவர். இதற்கு பிறகுதான் சாமியாராக மாறி, கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தார். தன் பெயரையும் கல்கி பகவான் என்றும் சூட்டிக் கொண்டார். இந்த ஆசிரமத்தில், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் உள்ளனர். எத்தனையோ பேர் இந்த ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கியும் உள்ளனர்.

7, 8 வருடத்துக்கு முன்பு இந்த ஆசிரமம் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பியது. அது சம்பந்தமான வீடியோக்கள் கூட வெளியே வந்து விசாரணையும் நடந்தது. அந்த பரபரப்பு ஓய்ந்த நிலையில் மீண்டும் கல்கி ஆசிரமத்தில் இன்று திடீர் ரெய்டு நடந்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலக் கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் இன்று காலை முதலே அதிகாரிகள் ரவுண்டு கட்டி சோதனையை நடத்தி வருகிறார்கள்.

சாமியாருக்கு கொஞ்ச நாளாக உடம்பு சரியில்லாத காரணத்தினால் , அவரது குடும்பத்தினர்தான் இந்த ஆசிரமத்தை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
it raid in kalki samiyar ashram 40 centers including andhra center from this morning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X