Just In
அம்மாடியோவ்... ரூ. 433 கோடி வரி ஏய்ப்பு.. தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸும் லிஸ்ட்ல இருக்கு!
சென்னை: தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ. 433 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை ஜிஎஸ் ஸ்கொயர், தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமம் உள்பட 74 நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரி சோதனை நடத்தி வந்தனர்.

இந்த சோதனையில் 70 வருமான வரித்துறையினர், காவல் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். இதில் வருமான வரிச் சோதனை நிறைவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் ரூ .433 கோடி அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் கணக்கில் வராத ரூ. 25 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கம், 626 கேரட் வைரம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!