சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவரை கொன்று கூட இருக்கலாம்.. போராளி முகிலனின் மனைவி குமுறல்.. 6 நாட்களாக தொடரும் மர்மம்!

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன் காணாமல் போய் இன்றுடன் 6 நாட்கள் ஆகிவிட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: முகிலன் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது, உயிரோடு இருக்கிறாரா? இதுதான் தற்போது தமிழகத்தில் மிக முக்கிய கேள்வியாக மாறி இருக்கிறது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன் காணாமல் போய் இன்றுடன் 6 நாட்கள் ஆகிவிட்டது. சென்னையில் ''பிரஸ் மீட்டில்'' கலந்து கொள்வதற்காக வந்தவர் எங்கே போனார் என்று தெரியவில்லை.

போலீஸ் கைது செய்து சென்றதா, எதிரிகள் கடத்தி சென்றார்களா, காணாமல் போனாரா, கொல்லப்பட்டாரா என்று எந்த தகவலும் தெரியாமல் அவருக்கு நெருக்கமானவர்கள் கடும் சோகத்தில் இருக்கிறார்கள்.

மக்களுக்காக போராடியவருக்கு பேச யாருமில்லை.. மாயமான முகிலன்.. அமைதி காக்கும் அரசியல் தலைவர்கள்! மக்களுக்காக போராடியவருக்கு பேச யாருமில்லை.. மாயமான முகிலன்.. அமைதி காக்கும் அரசியல் தலைவர்கள்!

முகிலன்

முகிலன்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன் பல அடையாளங்களை கொண்டவர். சிறு வயதில் இருந்தே மக்களுக்காக போராடியவர், ஸ்டெர்லைட், சேலம் 8 வழி சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், தாது மணல் கொள்ளை, மணல் கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று மக்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைக்கும் எதிராக குரல் கொடுத்து போராடி இருக்கிறார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

முக்கியமாக ஸ்டெர்லைட்டிற்கு எதிராக இவர் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தார். கட்டுரைகள் மூலம், ஆவணங்கள் மூலம் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் நடந்த கலவரங்களையும், அதன் உண்மை பின்னணியையும் தொடர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டே இருந்தார். இதனால் பல முறை முகிலன் தமிழக போலீசால் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வந்தார்

சென்னை வந்தார்

என் கணவரை அவர்கள் கொன்றிருக்க கூட வாய்ப்புள்ளது, என்றுதான் முகிலன் காணாமல் போனது குறித்து அவரின் மனைவி பூங்கொடி தெரிவித்தார். அவரை போலீஸ் என்கவுண்டர் செய்து இருக்கலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக முகிலன் காணாமல் போன விவகாரத்தில் பரபரப்புடன் கூடிய மர்மம் நீடித்து வருகிறது.

எங்கே சென்றார்

எங்கே சென்றார்

இந்த நிலையில் விழா முடித்து இரவு 10.20 மணிக்கு மதுரை செல்லும் ரயிலுக்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்று உள்ளார். 10 மணி வாக்கில் எழும்பூர் ரயில்நிலையம் சென்று இருக்கிறார். இரவு 1 மணி வரை அவர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்துள்ளார். அதன்பின் 1.30 மணியளவில் அவர் ஆப்லைன் சென்றுள்ளார் . அவ்வளவுதான்.

காணாமல் போனார்

காணாமல் போனார்

ஆம் அவ்வளவுதான். மறுநாள் காலை 11 மணிக்கு மதுரை செல்ல வேண்டியவர் அங்கு செல்லவில்லை. நண்பர்கள் வீட்டிற்கும் எங்கேயும் செல்லவில்லை. சென்னையிலும் இல்லை. எங்கே மறைந்து சென்றார், என்ன ஆனது அவருக்கு என்று இப்போது வரை ஒரு தகவல் கூட இல்லை. 6 நாட்கள் ஆகியும் அவரை குறித்து ஒரு சின்ன ஆதாரம் கூட கிடைக்கவில்லை.

என்ன சொல்கிறார்கள்

என்ன சொல்கிறார்கள்

முகிலனின் நண்பர்கள், சக போராளிகள், முகிலனின் மனைவி உள்ளிட்டோர் நேரடியாக தமிழக அரசு மீதுதான் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

முகிலனை போலீஸ் கைது செய்து இருக்கலாம், அவரை என்கவுண்டர் செய்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவரை ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அடியாட்கள் கடத்தி இருக்கலாம். போலீசுக்கு எதிராக ஆவணம் வெளியிட்டதால் போலீஸ் அவரை கடத்தி அடைத்து வைத்து இருக்கலாம், ஏன் கொலை கூட செய்து இருக்கலாம் என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.

மனு தாக்கல்

மனு தாக்கல்

இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆட்கொணர்வு மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முகிலனை நாளை சென்னை ஹைகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால் முகிலன் எங்கே இருக்கிறார் என்பது குறித்த ஒரு சிறிய தகவல் கூட இன்னும் வெளியாகவில்லை.

மிக மோசம்

மிக மோசம்

என் கணவரை அவர்கள் கொன்றிருக்க கூட வாய்ப்புள்ளது, என்றுதான் முகிலன் காணாமல் போனது குறித்து அவரின் மனைவி பூங்கொடி தெரிவித்தார். அவரை போலீஸ் என்கவுண்டர் செய்து இருக்கலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக முகிலன் காணாமல் போன விவகாரத்தில் பரபரப்புடன் கூடிய மர்மம் நீடித்து வருகிறது.

English summary
It's already 6 days: No one finds No clue on Activist Mugilan missing case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X