சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமரை அவமதிப்பதை ஏற்க முடியாது.. அர்ஜென்டினா கார்ட்டூனுக்கு குஷ்பு கடும் கண்டனம்

பிரதமரை அவமதிப்பதை ரசிக்காதீர்கள் என்று குஷ்பு சொல்லி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அர்ஜென்டினா கார்ட்டூனுக்கு குஷ்பு கடும் கண்டனம்- வீடியோ

    சென்னை: "பிரதமரை அவமதிப்பதை ரசிக்காதீர்கள்" என அட்வைஸ் செய்து ட்வீட் போட்டுள்ளார் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு.

    சமீபத்தில் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி அர்ஜென்டினா சென்றிருந்தார். அப்போது, அந்நாட்டின் மீடியா ஒன்று, 'அப்பு' என்ற கார்ட்டூன் கேரக்டரை மோடியுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்தி இருந்தது.

    இப்படி ஒரு நாட்டின் பிரதமரை கார்ட்டூன் போட்டு உருவகப்படுத்தியதற்காக காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

    தேசிய அவமானம்

    இது சம்பந்தமாக ஒரு ட்வீட் அவர் போட்டுள்ளார். அதில், "இது தேசிய அவமானம். அரசியல் கொள்கை ரீதியாக நமக்குள்ள நிறைய வேறுபாடு இருக்கலாம். எப்பவுமே முட்டி மோதிக் கொள்ளலாம்.

    சண்டை வேறு

    சண்டை வேறு

    ஆனால், நம் நாட்டு பிரதமரை அவமதிப்பதை நம்மால் ஏற்க முடியாது. நமக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. நமது கொள்கை மாறுபட்டு அதனால் சண்டை போடுவது வேறு.

    நிறுத்துங்கள்

    நிறுத்துங்கள்

    ஆனால் இப்படி கேவலப்படுத்தும் கார்டூனை ரசிக்கத் தொடங்கினால் நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்? அதனால் அப்படிசெய்வதை நிறுத்துங்கள்" என்று சொல்லி உள்ளார்.

    பப்பு என்றீர்கள்?

    முன்னதாக, ட்விட்டரில் ஒருவர், "நீங்கள் ராகுலை பப்பு என்றீர்கள், உங்களை வெளிநாட்டுக்காரர் பப்பு என்று சொல்லிவிட்டார்" என கேலி செய்து பதிவிட்டிருந்தார். இதற்காகத்தான் குஷ்பு இவ்வாறு ட்வீட் போட்டுள்ளார்.

    English summary
    It's an insult to India: Khushbhu Tweet about PM Modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X