சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போதும்.. இனியும் வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை சொல்லாதீங்க.. கார்த்தி சிதம்பரம் ஒரே போடு

Google Oneindia Tamil News

சென்னை: வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்காதீர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பீகாரில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோக்சபா உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இந்த குற்றச்சாட்டை ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார்.

பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி... இன்னும் சீட்டை குறைச்சுடுமோ திமுக? பீதியில் காங்கிரஸ் பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி... இன்னும் சீட்டை குறைச்சுடுமோ திமுக? பீதியில் காங்கிரஸ்

 கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

டுவிட்டரில் அவர் இதுபற்றி கூறுகையில், தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறுவதை நிறுத்த வேண்டிய காலகட்டம் இது. எனது அனுபவத்தில் மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் துல்லியமானது, நம்பகத் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 மாறுபட்ட கருத்துக்கள்

மாறுபட்ட கருத்துக்கள்

எதிர்கட்சி நெட்டிசன்கள் சிலரும் கூட வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழிபோட்டு, பாஜகவின் திட்டமிட்ட உழைப்பை நாம் மறுப்பதால்தான் தொடர்ந்து தோல்வியை தழுவிக் கொண்டு இருக்கிறோம் என கூறுவதை பார்க்க முடிகிறது.

காரணங்கள் இதுதான்

காரணங்கள் இதுதான்

பாஜக சிறப்பாக திட்டமிடுகிறது, அதன் தொண்டர்கள் தீவிரமாக உழைக்கிறார்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளில் பெரிய தலைவர் கிடையாது என்ற சூழ்நிலை நிலவுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், வாக்குப்பதிவு இயந்திரத்தை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு பொறுப்பை தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுவதையும் பார்க்க முடிகிறது.

இடைத் தேர்தல்கள்

இடைத் தேர்தல்கள்

பீகார் தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தல்கள் என அனைத்திலும் பாஜக கூட்டணி முன்னிலையில் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி, எதிர்க்கட்சியை சேர்ந்த சில ஆதரவாளர்கள் சந்தேகங்களை கிளப்பிய நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

English summary
Whatever be the outcome of any election, it's time to stop blaming the EVM. In my experience, the EVM system is robust, accurate and dependable, says Karti P Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X