சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவில் நவநீதகிருஷ்ணனின் பதவி பறிக்கப்பட்டது ஏன்?.. விளக்கம் அளித்த ஜெயக்குமார்.. பரபர பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் இருந்து கொண்டு திமுக கட்சி அலுவலகத்துக்கு செல்வதை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

Recommended Video

    அதிமுகவில் நவநீதகிருஷ்ணனின் பதவி பறிக்கப்பட்டது ஏன்?.. விளக்கம் அளித்த ஜெயக்குமார்.. பரபர பேட்டி

    3 பேரில் ஒருவர் பலியாக வாய்ப்பு.. நியோ கோவ் உருமாறிய வைரஸ் பற்றி வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை 3 பேரில் ஒருவர் பலியாக வாய்ப்பு.. நியோ கோவ் உருமாறிய வைரஸ் பற்றி வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

     ஆலோசனை கூட்டம்

    ஆலோசனை கூட்டம்

    மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு
    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதாக அவர் கூறினார்.

    எங்களுடன் இருந்தால் மட்டுமே லாபம்

    எங்களுடன் இருந்தால் மட்டுமே லாபம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் எங்களுக்கு வெற்றியை தருவார்கள் என்று கூறிய ஜெயக்குமார்
    திமுகவின் 8 மாத ஆட்சியில் மக்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிட்டு உள்ளனர். சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
    கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் எங்களுடன் இருந்தால் மட்டுமே லாபம். இல்லை என்றால் விலகி செல்லும் கட்சிக்கு தான் நஷ்டம். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்எனவும் கூறினார்.

    நாகரீகமற்ற செயல்

    நாகரீகமற்ற செயல்

    அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கட்சி பதவியில் இருந்து நீக்கப்ட்டது குறித்து பதில் அளித்த ஜெயக்குமார்
    அதிமுகவில் இருந்து கொண்டு திமுக கட்சி அலுவலகமாக உள்ள அறிவாலயத்திற்கு செல்வது நாகரீகமற்ற செயல். அங்கு கால் வைப்பதே அவமானம் அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் பேசியது ஏற்றுகொள்ள முடியாது என்றும் எனவே கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த நடவடிக்கை போதாது

    இந்த நடவடிக்கை போதாது

    திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது போதாது என்றும் அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இது போன்ற செயல் தொடர்ந்து நடைபெறும் எனவும் ஜெயக்குமார் கூறினார்.

    English summary
    Former minister Jayakumar said it was unacceptable to go to the DMK office from the AIADMK. He also said that the AIADMK would win the urban local body elections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X