சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல்- வீடியோ

    சென்னை: கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான். இதனால் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன.

    தேர்தல் என்றாலே ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் பிரசாரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு எதையும் எழுதி வைத்துக் கொள்ளாமல் புள்ளி விவரங்களுடன் பேசுவதில் இருவரும் வல்லவர்கள்.

    திமுக என்றால் அது கருணாநிதி, அதிமுக என்றால் அது ஜெயலலிதா என்ற பிம்பம் ஒவ்வொரு தேர்தலிலும் எதிரொலித்தது.

    லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி! லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி!

    வாக்காளர்கள்

    வாக்காளர்கள்

    அதிமுக இரண்டாக பிளவானபோது கூட சசிகலாவுக்கு ஆதரவு தரக் கூடாது என்ற பேச்சு வரும்போது பெரும்பாலான வாக்காளர்கள் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு சசிகலாவுடன் இணைய வேண்டும். ஓபிஎஸ்ஸுடன் சேருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

    ஜெ. முகம்

    ஜெ. முகம்

    அப்போது அவர்களிடம் எகிறிய எம்எல்ஏக்கள், ஓட்டு போட்டதுடன் உங்கள் வேலை முடிந்து விட்டது என கூறினர். அதற்கு மக்களோ உங்கள் முகத்தை பார்த்து நாங்கள் போடவில்லை. ஜெயலலிதாவின் முகத்தை பார்த்துதான் ஓட்டு போட்டோம் என்றனர். அந்த அளவுக்கு அதிமுக, இரட்டை இலை என்றால் அது ஜெயலலிதா என்ற ஒரு பிம்பம் வந்துவிட்டது.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    கருணாநிதியின் மீது தொண்டர்களுக்கு பற்றும் பாசமும் இருந்தபோதிலும் அவர் இருக்கும் போதே அனைத்தும் ஸ்டாலின் என்றாகிவிட்டது. கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது கூட ஸ்டாலின்தான் அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.

    சூழல்

    சூழல்

    தற்போது இருவரும் இல்லாத சூழலில் மக்களின் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த தேர்தல் மூலம் அதிமுகவுக்கு ஒரு பிம்பம் கிடைக்கிறதா என்பதையும் தமிழகம் உற்று நோக்கி வருகிறது. சுருக்கமாக சொல்ல போனால் திமுக, அதிமுகவுக்கு இது ஆசிட் டெஸ்ட் போன்றதாகும்.

    முக்கியம்

    முக்கியம்

    எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று முதல் முறையாக பொதுத் தேர்தலை சந்திக்கிறார். இதனால் இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    English summary
    Tamilnadu is facing a firsrt general election after Jayalalitha and Karunanidhi demise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X