சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நச்சுன்னு நங்கூரமிட்டு உட்கார்ந்த செந்தில்பாலாஜி.. கிடுகிடுவென உயர்ந்த செல்வாக்கு.. சீனியர்கள் ஷாக்

சீனியர்களை மதிப்பதில்லை என்று செந்தில் பாலாஜி மீது அதிருப்தி என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    M K Stalin: ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் மலை போல நம்பும் அந்த இருவர்- வீடியோ

    சென்னை: திமுகவுக்குள் அசைக்க முடியாத புள்ளியாக உயர்ந்து விட்டார் செந்தில் பாலாஜி.. அதற்காக சீனியர்களுக்கு மதிப்பு தரக்கூடாதா என்ற கேள்வியை தொண்டர்கள் முன் வைத்து வருகின்றனர்.

    ஆரம்ப காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்கவராகத்தான் செந்தில் பாலாஜி தன்னை அரசியலில் வெளிப்படுத்தி வருகிறார்.

    திமுகவில் தொடங்கி, அதிமுகவில் இணைந்து, பிறகு அமமுகவில் நுழைந்து, இப்போது மீண்டும் திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இவர் எந்த கட்சியில் இருக்கிறாரோ அவர்களுக்கு லாபம்தான்

    முதல்ல மூடு கிரியேட் பண்ணனும்.. பிறகு விடிய விடிய.. இளம் தாயின் பதற வைக்கும் ஸ்மியூல்...!

    செல்வாக்கு

    செல்வாக்கு

    கரூர் தொகுதி பற்றி மட்டுமில்லை.. மத்திய மேற்கு மாவட்டத்தைகூட கவலையே படதேவையில்லை. கட்சி தலைமை நிம்மதியாக இருக்கலாம், செந்தில் பாலாஜி இருக்கிறார் என்ற தைரியம், தெம்புடன் இருக்கலாம். தம்பிதுரை என்ற சீனியரையே ஜெயிக்க வைக்கும் அளவுக்கு செல்வாக்கு + பசை உள்ள பார்ட்டிதான் இவர்.

    நடுக்கம்

    நடுக்கம்

    இப்போது திமுக பக்கம் வந்துள்ளதால், கட்சியே பலமாக காணப்படுகிறது. ஏனெனில், இவர் அங்குசென்றுதான் அமமுகவில் உள்ள தனது நண்பர்களை பேசி தன்பக்கம் இழுத்து கொண்டு சென்றவர். இதுபோக இவர்தான் வேட்பாளர் என்று திமுக அறிவித்ததுமே அதிமுகவுக்குள் இனம் புரியாத நடுக்கமும் வந்து போனது.

    மன வருத்தம்

    மன வருத்தம்

    இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், சீனியர்களை செந்தில் பாலாஜி ஓரங்கட்டுகிறார் என்ற ஒரு சமாச்சாரம் எழ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் நேருவுக்கு செந்தில் பாலாஜி முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கூறுகிறார்கள். இதுதான் தொண்டர்களுக்கு சற்று மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

    சீனியர்கள்

    சீனியர்கள்

    உண்மையிலேயே நேருதான், செந்தில்பாலாஜியை திமுகவுக்கு கூட்டி வந்தவர் என்பதாலேயே இந்த வருத்தம் எழுந்துள்ளது. அதற்கேற்றபடி, கரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு கூட, நேருவை செந்தில் பாலாஜி அழைக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஐ.பெரியசாமி போன்ற சீனியர்களை நிகழ்ச்சிக்கு கூப்பிடும் நேரத்தில், நேருவை மட்டும் ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள்.

    கட்சி தலைமை

    கட்சி தலைமை

    செந்தில்பாலாஜி உண்மையிலேயே மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், தனது வழிகாட்டியுமான நேருவுக்கு முக்கியத்துவம் தரவில்லையா என்பது தெரியவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த போக்கை செந்தில் பாலாஜி மாற்றி கொள்வதுதான் கட்சிக்கு உகந்ததாக இருக்கும். இல்லையென்றால், கட்சி தலைவர் இதில் தலையிட்டு ஒரு சுமூக போக்கை கொண்டு வருவதும் உடனடி அவசியமானதாக இருக்கும்!

    English summary
    It is said that DMK MLA Sendhil Balaji does not give respect to the Party Senior members including KN Nehru
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X