உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது! மத்திய அரசுக்கு சவால் விடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!
சென்னை: சமஸ்கிருத மொழியை உயிரூட்டும் மத்திய அரசின் முயற்சி ஒரு போதும் நிறைவேறாது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
உருது மொழி குறித்த உண்மைகள் தொடர்ந்து மறைக்கப்படுவதாகவும் செத்துப்போன மொழிகளை உயிர்பிக்கும் பகீரத முயற்சியை மோடி அரசு கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வேற்றுமையில் ஒற்றுமை
இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை பேணும் தேசம். சமீபத்தில் பிரதமர்நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரவர்க்கத்தினர் இந்தி மொழியை இந்திய தேசத்தின் பொதுமொழியாக்கும் நோக்கத்தில்பேசி வருகின்றனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 8 -வது செடியூல்டு 22தேசிய மொழிகள் எனப் பட்டியல் இட்டிருக்கிறது.

இந்தி பேசுவோர்
இவற்றில் இந்தி பேசுவோர் 140 கோடி இந்தியர்களில் 52 கோடிப் பேர் என்றுஅவர்களாகவே ஒரு கணக்கீட்டை வெளியிட்டு இந்தியை இந்தியாவின் பொதுமொழியாக்கவேண்டும் என்று பரப்புரை செய்து வருகின்றனர். வட மாநிலங்களில் பேசப்படும்56 மொழிகளை 'இந்தி' என்று கூறி, இந்தி பேசுவோர் எண்ணிக்கையை கூட்டிக் காட்டி வருகின்றனர்.

நீதிமன்ற மொழி
இந்திய அரசு மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், அறிவியல் மொழியாகவும்,உயர்கல்வித் திட்ட மொழியாகவும், ஆங்கிலம் இருக்கிறது; அது மேலும்வலுப்பெற்றுத் தொடர்ந்திட வேண்டும். இதில் தொய்வோ, சுணக்கமோ, மாற்றமோஏற்படுமானால், இந்தியா உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு,கற்காலத்திற்கச் செல்லும் நிலையே உருவாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

121 மொழிகள்
மற்றொரு உண்மையை அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து மறைத்துக்
கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் பேசப்படும் மொழிகள் 1950 -க்கும் மேலாக
உள்ளன என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவற்றில் 121 மொழிகள் தாம்
பத்தாயிரம் பேருக்கு அதிகமாகப் பேசும் மொழிகளாக இருக்கின்றன. அந்தமான்
நிகோபாரில் உள்ள ஒரு மொழியை ஒரே ஒரு மூதாட்டிதான் பேசுகிறார். அவர்
இல்லையென்றால் அந்த மொழி இருக்காது. இப்படித் தொடர்ந்து அழிந்து
கொண்டிருக்கும் மொழிகளும் உள்ளன என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவித்து வருகின்றன.

19,500 மொழிகள்
இந்தியாவில் 19,500க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும், இந்தி பேசுவோர்
அதிகம் என்று பொய்யான பரப்புரை செய்தாலும், இந்தியோ, வேறு எந்த மொழியோ,
இந்தியா முழுவதிலும் பேசப்படும் மொழி இல்லை.
இந்தியோ, தமிழோ, கர்நாடகமோ, தெலுங்கோ, மலையாளமோ, மராத்தியோ, வங்காளமோ,
இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பேசப்படும் மொழியாக இல்லை.

ஹிந்துஸ்தானி
இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும், மதம், இனம், கலாச்சாரம்
கடந்து பேசப்படும் மொழி ஒன்றே ஒன்றுதான்! அதுதான் உர்து! இதைத்தான்
ஹிந்துஸ்தானி என்றார்கள். இந்த உர்துதான் - ஹிந்துஸ்தானிதான் - மக்கள்
மொழியாக, திரைப்பட மொழியாக, கவியரங்க மொழியாக இந்தியாவில் பிறந்து,
இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் புரிந்த மொழியாக இருக்கிறது. இந்த உண்மை
தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது.

செத்துப்போன சமஸ்கிருதம்
இந்தி என்ற பெயரால், செத்துப்போன சமஸ்கிருத மொழியை மீண்டும்
உயிர்ப்பிக்கும் பகீரத முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது. இஸ்ரேலில்
செத்துப்போன ஹீப்ரு மொழியை உயிர்த்தெழச் செய்ததுபோல் இந்தியாவில்
சமஸ்கிருதத்தை உயிரூட்டலாம் என்று நப்பாசை கொண்டு ஒன்றிய அரசு கங்கணம்
கட்டி வேலை செய்கிறது! அது ஒருபோதும் நடக்காது! சமஸ்கிருதத்தை
இந்தியாக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளுமானால் 2024க்கு முன்னரே
ஒன்றிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும் என்பது சரித்திரம் கூறும் பரப்புரை.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.