சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அசர வைக்கும் அறிவாலயம், தத்ரூபமான தலைமை செயலகம்- வரலாறு பேசும் அன்பழகனின் கூட்ட வடிவமைப்புகள்

Google Oneindia Tamil News

சென்னை: அசர வைக்கும் அறிவாலயம் முதல் தலைமை செயலகம் வரை ஜெ அன்பழகன் ஏற்பாடு செய்த கூட்ட வடிவமைப்புகள் வரலாறு பேசும் அளவிற்கு செய்யப்பட்டதை திமுக நிர்வாகிகள் மறக்க முடியாத நிகழ்வாக கூறுகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக குரோம்பேட்டையில் உள்ள ரீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் பிரச்சினையும் கூடவே இருந்ததாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில் அவர் இன்று காலை இயற்கை எய்தினார்.

பிறந்தபோதும் தாயின் அருகில்... இறந்தபோதும் தாயின் அருகில்... ஜெ. அன்பழகனுக்கு கிடைத்த பாக்கியம் பிறந்தபோதும் தாயின் அருகில்... இறந்தபோதும் தாயின் அருகில்... ஜெ. அன்பழகனுக்கு கிடைத்த பாக்கியம்

தருணங்கள்

தருணங்கள்

அவரது நினைவுகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு நல்ல தொண்டனுக்கு அழகே தனது கட்சி தொண்டால் தலைவனின் மனதில் இடம் பிடிப்பது. அந்த வகையில் ஜெ அன்பழகன் கொடுத்து வைத்தவர் என்றே சொல்லலாம். ஆம், கருணாநிதி, ஸ்டாலின் மனதில் வேரூன்றி உட்கார்ந்துவிட்ட தருணங்கள் ஏராளம் உண்டு என்கிறார்கள்.

வரலாறு

வரலாறு

ஆம். பொதுவாக எந்த ஒரு கட்சியின் கூட்டமோ பிரச்சாரமோ, கட்சி விழாவோ அது எதுவாக இருந்தாலும் பெரிதும் உற்றுநோக்கப்படுவது அரங்குகள்தான். இது போன்ற அரங்குகள் வரலாறு பேசுவதை போல் இருக்க வேண்டும். அந்த வகையில் ஜெ அன்பழகன் ஏற்பாடு செய்த கூட்டரங்க அமைப்புகள் இன்றும் வரலாறு பேசுவதோடு தளபதி ஸ்டாலினின் மனதில் மிகப் பெரிய இடத்தை பிடித்துவிட்டார் என்கிறார்கள்.

பிறந்தபோதும் தாயின் அருகில்... இறந்தபோதும் தாயின் அருகில்... ஜெ. அன்பழகனுக்கு கிடைத்த பாக்கியம்பிறந்தபோதும் தாயின் அருகில்... இறந்தபோதும் தாயின் அருகில்... ஜெ. அன்பழகனுக்கு கிடைத்த பாக்கியம்

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

கருணாநிதியின் பிறந்த நாள் விழாவின் போது வள்ளுவர் கோட்டம் ஒரு கூட்டரங்கை அமைத்தார் ஜெ அன்பழகன். இதில் கலந்து கொண்ட முக ஸ்டாலினுக்கு செங்கோலையும் அளித்தார். அது போல் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அண்ணா அறிவாலயம் போன்ற அரங்கை அமைத்திருந்தார்.

கொரோனாவுக்கு பலியான முதல் தமிழக எம்எல்ஏ ஜெ. அன்பழகன்- சென்னையில் உடல் நல்லடக்கம்கொரோனாவுக்கு பலியான முதல் தமிழக எம்எல்ஏ ஜெ. அன்பழகன்- சென்னையில் உடல் நல்லடக்கம்

தலைமை செயலகம்

தலைமை செயலகம்

அதே போல் கருணாநிதியின் 95ஆவது பிறந்தநாள் விழாவில் அவர் அமைத்த அரங்கை மறக்கவே முடியாது என்கிறார்கள். மேலும் தலைமை செயலகம் போன்ற அரங்கத்தையும் ஜெ அன்பழகன் அமைத்துள்ளார். அண்ணா அறிவாலயம், தலைமை செயலகம், வள்ளுவர் கோட்டம், முரசொலி அலுவலகம் என எதுவுமே தப்பவில்லை. அனைத்தையும் தத்ரூபமாக செய்ய பெரிதும் உதவியவர்.

English summary
J. Anbalagan was very much dedicated to organise party functions. Anna Arivalayam, Secretariat sets were recalled by activists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X