சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களே தண்ணீர் தட்டுப்பாடா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Google Oneindia Tamil News

சென்னை: சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவுகிறதா என திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கேட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு பொய்த்துவிட்டது. இதனால் இந்த கோடை காலம் ஆரம்பம் ஆவதற்கு முன்னரே தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. இந்த நிலையில் ஃபனி புயலால் அதிக அளவு வெப்பம் ஏற்பட்டுள்ளது.

J.Anbazhagan tweet to solve water crisis for Chepauk- Triplicane

இதனால் நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுவிட்டன. மக்கள் தண்ணீருக்காக பாடுபடுகின்றனர். கிராமப்புறங்களில் ஆறுகளில் ஊற்றுத் தோண்டி எடுத்து சிறிய கொப்பரைகள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

இதெல்லாம் பேர கெடுக்க சதிங்க.. கல்வெட்டு விவகாரம் குறித்து ஓபிஎஸ் மகன் விளக்கம்! இதெல்லாம் பேர கெடுக்க சதிங்க.. கல்வெட்டு விவகாரம் குறித்து ஓபிஎஸ் மகன் விளக்கம்!

சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீரை தேடி அலைகின்றனர்.

இந்த நிலையில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிப்பதும் 3 நாட்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் யாரிடம் புகார் அளிப்பது என தெரியாமல் மக்கள் குழம்பியுள்ளனர்.

இந்த நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கீழ்கண்ட மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
சேப்பாக்கம் - 9444071150
திருவல்லிக்கேணி - 9840091488.

இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

English summary
DMK MLA J.Anbazhagan tweet to solve water crisis for Chepauk- Triplicane and also he gave a phone number.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X