சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் பிறந்த போயஸ் தோட்ட இல்லத்தை பார்க்க தடையா.. எங்க அத்தை இருந்திருந்தா.. தீபா கண்ணீர்

Google Oneindia Tamil News

சென்னை: நான் பிறந்த போயஸ் தோட்ட இல்லத்தை பார்க்கக் கூட தடையா. என் அத்தை இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா கண்ணீர் விட்டு அழுதார்.

இதுகுறித்து தீபா கண்ணீருடன் சன் நியூஸ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் நான் பிறந்தது வேதா இல்லத்தில்தான். பிறந்த இடத்தை பார்க்கக் கூட தடை விதிப்பதா? எங்கள் அத்தை இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? ஊரடங்கு அமலில் இருக்கும் போது வேதா இல்லத்திற்கு வரக் கூடாது என்றால் அவரது நினைவிடத்திற்கு சென்றேனே அப்போது மட்டும் ஊரடங்கு அமலில் இல்லையா?.

அதை ஏன் எதிர்க்கவில்லை? என் அத்தையை பார்க்கக் கூடாது. அவரை மருத்துவமனையில் பார்க்கக் கூடாது. அவரது சாவிற்கு நான் வரக் கூடாது. அவரது முகத்தை கடைசியாக பார்க்கக் கூடாது, அவரது வேதா இல்லத்திற்கும் வரக் கூடாது என்கிறார்கள்.

தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

வராமல் போவேன்

வராமல் போவேன்

இப்போது போயஸ் தோட்டத்தில் வேதா இல்லம் இருக்கும் தெரு பக்கமே வரக் கூடாது என கூறுகிறார்கள். என்ன நியாயம் இது? நானும் என் அத்தையை போல் இறந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்களா, அப்படியென்றால் நான் தற்கொலை செய்து கொண்டுதான் சாக வேண்டும். அவ்வாறு இறந்துவிட்டால் நான் இந்த தெரு பக்கமே வராமல் போய்விடுவேனே!

செல்லமாக வளர்ந்தேன்

செல்லமாக வளர்ந்தேன்

என் அத்தை வீட்டில்தான் நான் பிறந்தேன். பிறந்தது முதல் என்னை செல்லமாக வளர்த்தார். அப்படிப்பட்ட நான் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு எனது பிறந்த இடத்தை பார்க்கக் கூடாது என்றால் என்ன நியாயம்? இந்த மாநிலத்திலேயே நான் வாழக் கூடாதா, 4 ஆண்டுகளாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். என்னால் முடியவில்லை என தீபா தனது பேட்டியில் கதறி அழுதார்.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அவரின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கும் உரிமை உள்ளது. இவர்கள் இருவரும் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேரடி வாரிசுகள்

நேரடி வாரிசுகள்

இதையடுத்து அன்றைய தினம் தனது அத்தையின் நினைவிடத்திற்கு சென்று தீபாவும் அவரது கணவர் மாதவனும் அஞ்சலி செலுத்தினர். அது போல் வேதா இல்லத்திற்கும் தீபா சென்றார். இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு தீபாவும் தீபக்கும் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் திருத்தியுள்ளது.

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

அப்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வேதா இல்லத்திற்கு தீபா செல்லக் கூடாது என உத்தரவிடுமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு நீதிபதியும் தீபாவுக்கு அறிவுரை வழங்குமாறு அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Jayalalitha's brother's daughter J. Deepa cries for not allowing her to Veda Illam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X