சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது முடிவு அல்ல.. இனிதான் ஆரம்பம்.. வேதா நிலையத்தை சட்டரீதியில் போராடி மீட்பேன்- ஜெ தீபா சபதம்

Google Oneindia Tamil News

சென்னை: போயஸ் கார்டன் இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா சபதம் ஏற்றுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அதாவது வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது.

இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், அவரது தம்பி தீபக்கும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையானது... தீபா, தீபக் வாரிசுகளாக அறிவிப்பு!! ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையானது... தீபா, தீபக் வாரிசுகளாக அறிவிப்பு!!

அரசுடைமை

அரசுடைமை

இந்த நிலையில் ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த ரூ 68 கோடி இழப்பீட்டுத் தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியுள்ளது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தியதால் அரசுடைமையாக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது.

மேல்முறையீடு

மேல்முறையீடு

ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட தீபாவும் தீபக்கும் எதிர்ப்பை மீறி போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதால் அவர்கள் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

சட்டரீதி

சட்டரீதி

இதுகுறித்து தீபா கூறுகையில் இது முடிவு அல்ல. இனிதான் ஆரம்பம். வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விடமாட்டேன். சட்டரீதியாக மீட்டெடுப்பேன். வேதா இல்லத்தை விட்டுத் தர வேண்டும் என ஜெயலலிதா நினைக்கவில்லை.

Recommended Video

    செல்போன், டிவி- உங்க குட்டீஸின் ஆல்டைம் ஃபேவரைட்டா?.. கவலையை விடுங்க.. டயட்டை பிடிங்க.. டாக்டர் தீபா
    உயில் எழுதி...

    உயில் எழுதி...

    அவர் மரணம் எதிர்பாராதது, இல்லையேல் உயில் எழுதி வைத்திருப்பார் என்றார் தீபா. வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இல்லத்தில் தனது பாட்டிக்கும் பங்கு உண்டு என்பதே தீபா, தீபக்கின் வாதம் ஆகும்.

    English summary
    J.Deepa says she will appeal against Veda Nilayam was taken by State government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X