சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல் ஆளாக தம்பதி சமேதராய் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ஜெ.தீபா- மாதவன்.. அதிமுகவுக்கு குட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ. நினைவுநாள், அதிமுக, அமமுக இன்று மெரினா நோக்கி அமைதி ஊர்வலம்.

    சென்னை: ஜெயலலிதாவின் 2-ஆவது நினைவு தினத்தையொட்டி முதல் ஆளாக போய் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பின்னர் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டு ஒருவழியாக அதிமுகவின் இரு அணிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றன.

    அஞ்சலி

    அஞ்சலி

    ஜெயலலிதாவின் 2-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அவரது கணவன் மாதவனும் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    முழுமை

    முழுமை

    அப்போது ஜெ.தீபா செய்தியாளர்களிடம் கூறுகையில் இடைத்தேர்தலை மனதில் வைத்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிமுக அமைதி பேரணி நடத்துகின்றனர். அவரது மரணம் தொடர்பான ஒரு நபர் கமிஷன் விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    ஜெயலலிதா வழியை இந்த அதிமுக அரசு சரியாக பின்பற்றவில்லை என்றார். ஜெ.தீபாவுக்கும் மாதவனுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படுவதும் சாலையில் நின்று சண்டையிட்டு கொள்வதும் வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த தம்பதி சமேதராய் நினைவிடத்துக்கு வந்தது அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு அதிமுகவினரும், அமமுகவினரும் அமைதி பேரணி நடத்துகின்றனர். இதையொட்டி கூச்சல் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    J.Deepa- Madhavan couple pays their tribute to Jayalalitha in her memorial. She also criticises the TN government's peace rally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X