சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர் திருப்பம்.. அதிமுகவுடன் இணைகிறார் ஜெ. தீபா

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார் - ஓ.பன்னீர்செல்வம்

    சென்னை: அதிமுகவுடன் ஜெ தீபா இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அவர் மறைந்தவுடன் ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தத்தில் இணையவிருந்தார். இந்நிலையில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பு வெளியானதும் இருவரும் சொல்லி வைத்தாற் போல் தனது ஆதரவாளர்களுடன் கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

    கடுமையாக

    கடுமையாக

    இதையடுத்து ஓபிஎஸ் வீட்டுக்கு சென்ற அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டது. இந்நிலையில் திடீரென தீபா கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் ஆம் தேதி ஜெ. பிறந்தநாளன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    இணையவில்லை

    இணையவில்லை

    இந்நிலையில் சசிகலாவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் அதிமுகவில் ஜெ. தீபா இணைவார் என கூறப்பட்டு வந்தது. எனினும் அவர் இணையவில்லை.

    நிரூபிப்பாரா

    நிரூபிப்பாரா

    ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட ஜெ. தீபா ஆயத்தமானார். ஆனால் அவரது துரதிருஷ்டம் அவர் தாக்கல் செய்தச வேட்புமனுவில் கோளாறு ஏற்பட்டு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலிலாவது போட்டியிட்டு தனது இருப்பை நிரூபிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

    கருத்து

    கருத்து

    இதுகுறித்து ஜெ. தீபாவிடம் கேட்டபோது அவரோ, நானோ எனது கட்சியினரோ திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டார். இந்நிலையில் அவர் அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம் என்றும்
    அனைவரின் கருத்தும் அதுவாகவே இருக்கும் என்றும் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

    வந்தால் வரவேற்போம்

    வந்தால் வரவேற்போம்

    இதனிடையே ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திடம் இதுகுறித்து கேட்டபோது அதிமுகவுக்கு தீபா வந்தால் அவரை இணைத்துக் கொள்வோம் என கூறினார். ஜெயலலிதா இல்லாத நிலையில் அவர் சாயலில் உள்ள ஜெ. தீபாவால் தங்கள் இருப்பு நிரூபிக்க உதவலாம் என அதிமுக கருதுவதாக தெரிகிறது.

    English summary
    J.Deepa says that she is willing to join in ADMK. She discusses with her party members.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X