சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செல்லாது... செல்லாது... தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது... ஜெ.தீபா பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் செல்லாது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் 2-ம் நிலை வாரிசுகளாக அவரது அண்ணன் பிள்ளைகளான ஜெ.தீபாவையும், ஜெ.தீபக்கையும் உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தது. இதையடுத்து அந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த தீபா, ஜெயலலிதா சொத்து விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் இந்த தீர்ப்பின் மூலம் அரசின் அவசரச் சட்டம் செல்லாது எனவும் குறிப்பிட்டார்.

j deepa says, tn govt ordinance was not valid

வேதா நிலையத்தை நினைவில்லம் ஆக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவுர சுட்டிக்காட்டியுள்ளதாகவும், அதையும் மீறி ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மேல்முறையீடு செய்வோம் என்றும் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெ. தீபா... திடுதிப்பென குதித்த வாரிசு.. மி(தி)ரண்ட தொண்டர்கள்... காலநதியில் காணாமல் போன பரிதாபம்ஜெ. தீபா... திடுதிப்பென குதித்த வாரிசு.. மி(தி)ரண்ட தொண்டர்கள்... காலநதியில் காணாமல் போன பரிதாபம்

இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு மற்ற வழக்குகளுக்கு கூட உதாரணமாக திகழக்கூடும் எனக் கூறிய அவர், ஆளுநரிடம் ஜெயலலிதா இல்லம் தொடர்பாக கடிதம் மூலம் முறையிடுவேன் எனவும் கூறியுள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டியளித்த அவர் அதன் பின்னர் சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

English summary
j deepa says, tn govt ordinance was not valid
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X