சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியல் எனக்கு பிடிக்கவில்லை.. வேதனைதான் மிச்சம்.. விலகுகிறேன்.. தீபா அறிவிப்பு

ஜெ. தீபா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததை வாபஸ் பெற்றுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    J.Deepa Exclusive Interview| அரசியல் எனக்கு பிடிக்கவில்லை.. தீபா அறிவிப்பு

    சென்னை: அரசியலில் இருந்தே முழுசா விலகுவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்து உள்ளதுடன், அரசியல் எனக்கு பிடிக்கவில்லை, வேதனைதான் மிஞ்சியது என்றும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

    தீபாவின் முடிவை தற்போது அவரது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் கொண்டாடிக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பற்றி, ஜெயலலிதா இறந்தபிறகுதான் நிறைய விஷயங்கள் வேகவேகமாக வெளியே வந்தன.

    ஆனாலும் சர்ச்சைகளாலேயே ஃபேமஸ் ஆனவர்தான் தீபா. ஒரு கட்சியை ஆரம்பித்த உடனேயே அலப்பறை என்றால் அது தீபாவின் 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்புதான்.

    மாதவன்

    மாதவன்

    கட்சி ஆரம்பித்து 2 வருஷம் ஆக போகிறது.. ஆனால் கட்சியின் செயல்பாடுகள் என்ன, கொள்கைகள் என்ன என்று இதுவரை மக்களுக்கு தெளிவாகவே தெரியவில்லை. இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று காலை ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார். மேலும் தனது பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டதாகவும், அரசியலை விட்டு விலகுவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.

    தனித்து போட்டி?

    தனித்து போட்டி?

    அடிக்கடி தீபா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே நமக்கு தெரியாமலும் போனது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் எல்லாம் வருவார், ஏதாவது பேட்டி, அறிக்கை தருவார்.. பிறகு காணாமல் போய்விடுவார். இதைவிட, எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றுகூட அறிவித்து இருந்தார். ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு தேர்தலை சந்தித்தாரா, நிலைப்பாடு என்ன என்பது வெளி உலகுக்கு தெரியவில்லை.

    அதிரடி முடிவு

    அதிரடி முடிவு

    கட்சி ஆரம்பித்து 2 வருஷம் ஆக போகிறது.. ஆனால் கட்சியின் செயல்பாடுகள் என்ன, கொள்கைகள் என்ன என்று இதுவரை மக்களுக்கு தெளிவாகவே தெரியவில்லை. இந்த நிலையில் அரசியல் இருந்து விலகுவதாக இன்று காலை ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார். மேலும் தனது பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டதாகவும், அரசியலை விட்டு விலகுவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.

    அரசியல் பணி

    அரசியல் பணி

    ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, அவரிடம் நீங்க போகக் கூடாது என்று அவர்கள் வேண்டி விரும்பி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர். இதைப் பார்த்து நெகிழ்ந்து போன தீபா தனது முடிவை கைவிட்டார். முகநூல் பக்கத்திலிருந்தும் தனது பதிவை நீக்கி விட்டார். இதன் மூலம் அவர் தொடர்ந்து அரசியலில் தொடருகிறார் என்றே கருதப்பட்டது.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    இந்நிலையில், திரும்பவும் அரசியலில் இருந்து விலக போவதாக செய்தியாளர்களிடமே பகிரங்கமாக அறிவித்து விட்டார். அப்போது அவர் பேசும்போது, தனிப்பட்ட, மற்றும் சூழல் காரணங்களுக்காக அரசியலில் இருந்து விலகுவதாக கூறினார்.

    வேதனை

    வேதனை

    "அரசியல் எனக்கு பிடிக்கவில்லை, வேதனைதான் மிஞ்சியது. அரசியலில் எனக்கு வழி காட்ட சரியான நபர்கள் யாரும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையையும் நான் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், அதனால் அரசியலில் இருந்து விலகுகிறேன், யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். பெண்கள் அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால், தரம் தாழ்ந்த விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    ஜெயலலிதா சொத்துக்காக நான் அலையவில்லை. அதில் எனக்கு உரிமை உள்ளது. அவர் எனது அத்தை. என் அப்பாவின் சொந்த சகோதரி. அப்படி இருக்கும்போது சொத்துக்காக நாங்கள் அலைவது போல சொல்லாதீர்கள். அதில் எங்களுக்கு உரிமை உள்ளது. கேட்டே பெற முடியும். அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் அலைய வேண்டும்.

    போயஸ் வீடு

    போயஸ் வீடு

    அதிமுகவுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத 2 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். பல்வேறு சூழ்நிலை காரணமாக பேரவையை கலைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் நினைவுகளை பாதுகாக்கும் வகையிலேயே வீட்டை பராமரிக்க வேண்டும்" என்றார் ஜெ.தீபா

    English summary
    MGR Amma Deepa Leader J Deepa says has stepped away from politics and demands that no one be disturbed
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X