சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியல், சினிமாவில் கடுமையாக உழைத்தவர்.. உதவிக் கரம் நீட்டியவர் ரித்தீஷ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    J.K. Rithesh: நடிகர் ஜே. கே ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்- வீடியோ

    சென்னை: அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் சாதிக்க நினைத்தவர் ரித்தீஷ்.

    ராமநாதபுரத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜேகே ரித்தீஷ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 46. இலங்கை கண்டியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பிறந்தவர் ரித்தீஷ்.

    பின்னர் 1976-இல் ராமேஸ்வரத்துக்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ரித்தீஷ் ராமநாதபுரம் மாவட்டத்தில் முகமது சதாக் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்துள்ளார்.

    J.K. Rithesh died of cardiac arrest and he was civil engineer

    நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மரணம்.. 2வது மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர் நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மரணம்.. 2வது மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர்

    இவருக்கு 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு மனைவி ஜோதீஸ்வரியும் 10 வயதில் ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர். சின்னப்புள்ள எனும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் கானல் நீர் , நாயகன் பெண் சிங்கம், எல்கேஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    எல்கேஜி படத்தில் வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் வந்து அசத்தலாக நடித்திருப்பார். கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட ரித்தீஷ் ராமநாதபுரம் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    பின்னர் திமுகவிலிருந்து விலகி கடந்த 2014-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு நில அபகரிப்பு வழக்கில் சிறை சென்றிருந்தார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து பணிகளிலும் முனைப்பு காட்டியவர்.

    English summary
    J.K. Rithesh died of cardiac arrest. He was civil Engineer, his last movie was LKG.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X