சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நாளில் மாரடைப்பு ஏற்படாது.. விவேக்கிற்கு போடப்பட்டது கோவாக்சின்.. ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நாளில் மாரடைப்பு ஏற்படாது என்றும் விவேக்கிற்கு போடப்பட்டது கோவாக்சின் என்றும் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    24 மணி நேரத்திற்கு எதுவும் சொல்ல முடியாது மருத்துவர்கள் பேட்டி | Actor Vivek in Critical Condition

    இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் கூறுகையில் நடிகர் விவேக்கிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது வேதனையை ஏற்படுத்துகிறது.

    மோசமான நிலை

    மோசமான நிலை

    நேற்றைய தினம் சிரித்த முகத்துடன் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டார். மாரடைப்பு என்பது ஒரு நாளில் ஏற்படாது என மருத்துவர்கள் கூறினர். மிகவும் நல்லெண்ணத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டார் விவேக். நடிகர் விவேக்கின் உடல்நிலை தற்போதைக்கு மோசமான நிலையில்தான் உள்ளது.

    சிடி ஸ்கேன்

    சிடி ஸ்கேன்

    அவருக்கு கொரோனா பரிசோதனை, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுவிட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை. விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டத்தற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை.

    தடுப்பூசி

    தடுப்பூசி

    நடிகர் விவேக்கும் கோவாக்சின் தடுப்பூசிதான் செலுத்திக் கொண்டார். தமிழகத்தில் 5.88 லட்சம் பேர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட இதர நோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    சிறுவர்கள்

    சிறுவர்கள்

    கர்ப்பிணிகள், 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கூடாது. அது போல் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது. மக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.

    English summary
    Secretary of Health Department J Radhakrishnan says that cardiac arrest wont happen in a day
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X