சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை அரசு ஊழியர்களுக்கு நோ லீவ்.. விடுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் எந்த அரசு ஊழியரும் நாளை போராட கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் எந்த அரசு ஊழியரும் நாளை போராட கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகத்தில் கொதிப்பான நிலை உருவாகி இருக்கிறது. இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டத்திற்கு இன்னும் வேறு சில அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். நீதித்துறை பணியாளர்களும், தலைமைச் செயலக ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.

 என்ன அறிக்கை

என்ன அறிக்கை

இந்த நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தலைமைச் செயலக ஊழியர்கள் கண்டிப்பாக நாளை பணிக்கு வர வேண்டும். இல்லையெனில் மிக கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

 பணி நீக்கம்

பணி நீக்கம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பகுதிநேர மற்றும் தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்.

முக்கியம்

முக்கியம்

எந்த துறையிலும் யாரும் விடுப்பு எடுக்க கூடாது. மிக முக்கிய தேவைக்கு மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதி. நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது. அனைத்து துறையும் நாளை கண்காணிக்கப்படும்.

 என்ன உத்தரவு

என்ன உத்தரவு

ஊழியர்களின் வருகை பதிவை நாளை காலை 10.30 மணிக்கு அனுப்ப வேண்டும். அனைத்து துறையினரும் கண்டிப்பாக இதை அனுப்ப வேண்டும். இல்லையென்றால் மிக கடுமையான நடவடிக்கை பணியாளர்கள் மீது எடுக்கப்படும் , என்று கூறியுள்ளார்.

English summary
Jacto Geo: No leave for Gov Employees tommorrow, Otherwise will face action says TN chief secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X