சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாக்டோ ஜியோ.. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் புதிய சிக்கல்!

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் நேற்று முடிவிற்கு வந்தது. தற்காலிகமாக போராட்டம் நிறுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றில் இருந்து அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பி தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கினார்கள்.

மொத்தம் ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆனால் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு இருக்கிறார்கள்.

சம்பளம் பிரச்சனை

சம்பளம் பிரச்சனை

இவர்கள் எல்லோரும் போராடிய நாட்களுக்கான சம்பளம் பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது இவர்கள் எத்தனை நாட்கள் போராடினார்களோ அந்த நாட்களுக்கான சம்பளம் பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

என்ன குழப்பம்

என்ன குழப்பம்

இது தொடர்பாக ஏற்கனவே சில ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த போராட்டம் 9 நாட்கள் நடந்தாலும் சில ஊழியர்கள் 4 நாட்களில் வேலைக்கு திரும்பிவிட்டார்கள். இவர்கள் 4 நாட்கள் மட்டுமே போராடினார்கள்.

ஏற்கனவே பிடிக்கப்பட்டுவிட்டது

ஏற்கனவே பிடிக்கப்பட்டுவிட்டது

இதற்கான சம்பளம் தற்போது பிடிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மீதம் இருக்கும் ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் பிடிக்கப்படவில்லை. இதனால்தான் தற்போது சம்பளம் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. யாருக்கு எத்தனை நாள் சம்பளம் வழங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு கஷ்டம்

அரசுக்கு கஷ்டம்

இதனால் அனைவருக்கும் பிப்ரவரி 1ம் தேதி சம்பளம் வழங்கப்படுவது கஷ்டம் என்று அரசு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பான கணக்குகளை முடிக்க தாமதம் ஆகும் என்று கூறியுள்ளனர். இதனால் சம்பளம் வழங்குவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது. பிப்ரவரி 1ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 6ம் தேதி சம்பவம் வழங்கப்பட வாய்ப்பு

மொத்தமும் போச்சு

மொத்தமும் போச்சு

வேலை நிறுத்த நாட்களுக்கான மொத்த சம்பளத்தை பிடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 9 நாட்களுக்கான சம்பளத்தை பிடிக்க அரசு முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வரலாம்.

English summary
Jacto Geo protest: New confusion over the salary after the end of the 9-day long strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X