சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோரிக்கையை நிறைவேற்றினால் ஸ்டிரைக் வாபஸ்.. ஜாக்டோ ஜியோ அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Jactto-Geo Protest: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்- வீடியோ

    சென்னை: அமைச்சர் ஜெயக்குமாரின் அறிக்கையை ஏற்க முடியாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும் என ஜாக்டோ ஜியோ அதிரடியாக தெரிவித்துவிட்டது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அறிக்கை

    அறிக்கை

    இதனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும் அரசு பணிகள் தொய்வடைந்தன. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பணிக்கு உடனடியாக திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    செலவு அதிகரிக்காது

    செலவு அதிகரிக்காது

    இந்நிலையில் இதுகுறித்து ஜாக்டோ ஜியோவின் மாயவன் கூறுகையில், நாங்கள் புதிய கோரிக்கைகள் எதுவும் கேட்கவில்லை. ஏற்கெனவே அமலில் இருந்த திட்டத்தை அமல்படுத்த கோருகிறோம். இதனால் அரசுக்கு செலவு அதிகரிக்காது.

    வாபஸ் செய்வோம்

    வாபஸ் செய்வோம்

    எனவே ஜெயக்குமாரின் அறிக்கையை ஏற்க முடியாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே வேலை நிறுத்தத்தை வாபஸ் செய்வோம் என மாயவன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Jacto Geo Association says that Strike will be get back only after Old Pension Scheme implemented.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X