சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழர்களின் உணர்வை ரணப்படுத்தும் இனவெறியினரின் இழிசெயல் கண்டனத்திற்குரியது - இபிஎஸ், ஒபிஎஸ்

யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: யாழ்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தங்களின் ட்விட்டர் பக்கங்களின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் போர் நிகழ்ந்த போது கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்ந்த இனப்படுகொலையின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைப்பகுதியில் நினைவுத் ஸ்தூபி அமைக்கப்பட்டது.

Jaffna University Mullivaikkal memorial destroy - EPS and OPS condemns

கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த நினைவிடம் தற்போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில், இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

English summary
The Mullivaikkal memorial at the Jaffna University campus has been demolished overnight. Chief Minister Edappadi Palanichamy and Deputy Chief Minister O. Panneer Selvam have taken to their Twitter pages to condemn the move.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X