ஜெய் பீம்: முதல்வர் ஸ்டாலினை நேரிலேயே வந்து சந்தித்த பார்வதியம்மாள்.. உருக்கமாக சொன்ன விஷயம்!
சென்னை: ஜெய் பீம் படத்தில் செங்கேணி கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நிஜ செங்கேணியான பார்வதியம்மாளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.
நடிகர்கள் சூர்யா, லிஜோ மோல், மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி அமேசானில் ஹிட் அடித்த படம் ஜெய் பீம். இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
இந்த வருடம் வெளியான படங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக ஜெய் பீம் இப்போதும் திகழ்ந்து வருகிறது. ஞானவேல் இயக்கத்தில் ராஜ்கண்ணு என்பவரின் வாழ்க்கை வரலாற்றையும், முன்னாள் நீதிபதி சந்துரு நடத்திய சட்ட போராட்டம் குறித்தும் புனைவோடு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் பரபரப்பு! தலைவா! என்னால் விலகியிருக்க முடியவில்லை! அன்வர் ராஜா ஒட்டிய போஸ்டர்!

சூர்யா
பல மொழிகளில் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அக்னி கலசம் காட்சி ஒன்றில் பயன்படுத்தப்பட்டதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தில் செங்கேணி கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நிஜ செங்கேணியான பார்வதியம்மாள் கவனம் பெற்றார். இவரை கண்டுபிடித்து பலர் அவருக்கு உதவி செய்தனர்.

ஜெய் பீம்
நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாயை வழங்கி இவருக்கு உதவி செய்தார். அதேபோல் மேலும் பல நடிகர்கள் பார்வதிக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுத்து உதவி செய்தனர். தமிழ்நாடு அரசு சார்பாகவும் பார்வதிக்கு சென்று சேர வேண்டிய நில பத்திரம் கொடுக்கப்பட்டது. அதேபோல் இதில் வீடு கட்டிக்கொள்ளவும் அரசு செலவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

ஸ்டாலின் பார்வதியம்மாள்
அரசு சார்பாக இங்கு வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலினை பார்வதியம்மாளை நேரில் சந்தித்தார். அவரிடம் உங்களின் உதவிக்கு நன்றி. வீடு கட்டித்தர உத்தரவிட்டதற்கு நன்றி.

முதல்வர் ஸ்டாலின் பார்வதியம்மாள்
குடிசையில்தான் இத்தனை காலம் இருந்தேன் என்று கூறி முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கமாக நன்றி கூறினார். உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். உங்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பார்வதியம்மாளுக்கு உறுதி அளித்தார். இவர்களின் சந்திப்பு இன்று உருக்கமாக அமைந்து இருந்தது.