சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீர் விவகாரம்- ராஜ்யசபாவில் வைகோவை கடுமையாக தாக்கிப் பேசிய பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளரை ராஜ்யசபாவில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

நடப்பாண்டின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். இன்று லோக்சபா, ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் மீது பிரதமர் மோடி பேசினார்.

 Jammu Kashmir issue: PM Modi slams Vaiko in Rajyasabha

லோக்சபாவில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக சாடினார். நேருவின் கொள்கைகள், காங்கிரஸ் அரசின் முந்தைய செயல்பாடுகள் அடிப்படையில் தற்போதைய அரசு செயல்படுகிறது; இதை காங்கிரஸ் எதிர்க்கிறது என சுட்டிக்காட்டிப் பேசினார்.

தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் மாணவர்கள் இடைநிற்றல் 100% அதிகரித்துள்ளது அதிர்ச்சி தருகிறது- தினகரன்தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் மாணவர்கள் இடைநிற்றல் 100% அதிகரித்துள்ளது அதிர்ச்சி தருகிறது- தினகரன்

பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எழுந்து நின்று பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, தாம் 40 நிமிடமாக பேசிக் கொண்டிருக்கிறேன்.. இன்னும் அங்கு கரண்ட் ஏறவில்லை.... பல டியூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கின்றன என ராகுலை மறைமுகமாக கிண்டலடித்தார் மோடி.

இதன் பின்னர் ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி மதிமுக பொதுச்செயலர் வைகோவை காட்டமாக விமர்சித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அதனால் ஆகஸ்ட் 5-ந் தேதியை ஜம்மு காஷ்மீரின் கறுப்பு நாள் என்று வைகோ குறிப்பிட்டார்.

வைகோ அவர்களே! அது ஜம்மு காஷ்மீருக்கான கறுப்பு நாள் அல்ல.. யார் எல்லாம் பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுகிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த நாள் கறுப்பு நாள் என சாடினார் மோடி.

English summary
Prime Minister Narendra Modi has slammed that MDMK General Secretary Vaiko for Jammu Kashmir Issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X