சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துக்ளக் படிச்சுமா இப்படி.. ஒரே ஒரு வீடியோ போட்டார்.. அதையும் நீக்கிட்டாங்க.. நெட்டிசன்கள் கலாய்

துக்ளக் படிச்சுமா இப்படி என்று கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: 'துக்ளக் படிச்சுமா இப்படி' என்று ரஜினிகாந்த்தை ட்விட்டர்வாசிகள் கிண்டல் செய்து கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

Recommended Video

    யார் ரிப்போர்ட் செய்தது? டிவிட்டரில் ரஜினி வீடியோ நீக்கப்பட்டது இப்படி தான்

    கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை ரஜினிகாந்த் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இது தவறான தகவல் என்று கூறி அந்த வீடியோ ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது.. இதையடுத்து அந்த ட்வீட்டை நீக்க யார் காரணம் ரஜினிகாந்த ரசிகர்கள் ட்விட்டரில் சண்டை போட்டும், கேள்விகளை எழுப்பியும் வருகிறார்கள்.

     janata curfew: twitter reactions about rajnikanth

    சும்மாவே ரஜினிகாந்த்தை வம்பிழுத்து கமெண்ட்கள் போடுவார்கள்.. அந்தவகையில் ட்விட்டர்வாசிகளோ ரஜினிகாந்த்தை கிண்டல் செய்து மீம்ஸ்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டனர்.. #FakenewsRajini என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்து ரஜினியை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    துக்ளக் படிக்கிறவங்களை நீங்கதானே அறிவாளின்னு சொன்னீங்க தலைவரே... இப்ப துக்ளக் படித்தும் நீங்க மட்டும் எப்படி இப்படி தவறான தகவலை தெரிவித்தீர்கள்? ஒரு வருங்கால அரசியல்வாதி இப்படி பொய் தகவலை வெளியிட்டு மக்களை, அதுவும் இப்படி ஒரு சூழலில் குழப்பலாமா என்ற கேள்வியை காட்டமாக முன் வைத்துள்ளனர்.

    "காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்திங்களா?" என்றும் "12 மணி நேரத்துல வைரஸ் போயிரும்ன்னு சொன்னீங்க, 3 மணிநேரத்துல உங்க ட்வீட்டே போயிடுச்சே" என்றும் "வாரம் வாரம் துக்ளக் படி.. அதையும் மீறி கொரோனோ வந்தா என்னை செருப்பால அடி" என்றும் பல பதிவுகள் விழுந்தபடியே உள்ளன..

    English summary
    janata curfew: twitter reactions about rajnikanth
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X