சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Janatha Curfew Updates: தமிழகத்தில் காலை 5 மணியுடன் சுய ஊரடங்கு நிறைவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மக்கள் ஊரடங்கானது இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மேலும் மத்திய அரசு பரிந்துரைத்ததன்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சீல் வைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

பொதுமக்கள் வீடுகளிலேயே இருப்பது என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். கடந்த, வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திரமோடி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்று பேசினார்.

மக்களே தானாக முன்வந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

Newest First Oldest First
9:15 PM, 22 Mar

கொரோனாவிற்கு எதிராக சுயநலமின்றி போராடும் எல்லோருக்கும் நன்றி - சச்சின் டெண்டுல்கர்
8:56 PM, 22 Mar

கொரோனாவிற்கு எதிராக போராடும் எல்லோருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சல்யூட்
8:55 PM, 22 Mar

சென்னையில் பயணிகளின் நலன்கருதி 50% மாநகர பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு. நாளை காலை 5 மணி முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கும். 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் நிறுத்தம். மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்.
8:17 PM, 22 Mar

சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் நிறுத்தம். மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம். சென்னையில் நாளை மாநகரப் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு
8:08 PM, 22 Mar

ஜனதா ஊரடக்கம் முடிய உள்ள நிலையில் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பியது. சென்னை, பெங்களூரில் சில இடங்களில் வாகனங்கள் இயங்குகிறது
6:45 PM, 22 Mar

சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்சேவைகள் இன்று முதல் 31ம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தப்படுகிறது
5:31 PM, 22 Mar

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் மார்ச் 31 வரை ஊரடங்கு
5:11 PM, 22 Mar

டெல்லி ஜும்மா மசூதியில் தேசிய கொடியை ஏந்தி மருத்துவர்களுக்கு நன்றி கூறிய மக்கள்
5:07 PM, 22 Mar

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் கை தட்டி பாராட்டு
5:05 PM, 22 Mar

சென்னையில் முதல்வர் எடப்பாடி, புதுவையில் முதல்வர் நாராயணசாமி கை தட்டி நன்றி தெரிவித்தனர்
5:04 PM, 22 Mar

பல்வேறு வகை இசை ஒலி எழுப்பி கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்
5:04 PM, 22 Mar

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டோருக்கு இந்தியா முழுவதும் மக்கள் நன்றி தெரிவித்து கைதட்டல்
5:04 PM, 22 Mar

நாடு முழுவதும் மக்கள் வீடுகளில், பால்கனிகள் கூடி நின்று கைதட்டல்
5:02 PM, 22 Mar

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டோருக்கு பெருநகரங்களில் பொதுமக்கள் நன்றி தெரிவித்து கைதட்டல்
4:19 PM, 22 Mar

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க டெல்லியில் 144 தடை உத்தரவு
3:47 PM, 22 Mar

மேற்குவங்கம்: கொல்கத்தா உள்ளிட்ட 125 நகரங்களில் மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
3:35 PM, 22 Mar

பெங்களூருவில் இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 12 மணிவரை 144 ஊரடங்கு உத்தரவு
3:25 PM, 22 Mar

மகாராஷ்டிராவிலும் நாளை காலை வரை சுய ஊரடங்கை கடைபிடிக்க முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
3:25 PM, 22 Mar

கடைகள் அடைப்பு, பேருந்துகள் இயங்கவில்லை.. மனித நடமாட்டம் இல்லாத தேனி பழைய பேருந்து நிலையம்
3:20 PM, 22 Mar

நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவை அடுத்து தமிழக தலைநகர் சென்னையில் வெறிச்சோடி காணப்படும் பூந்தமல்லி ஹைரோடு, அண்ணா ஆர்ச், அமைந்தகரை சாலைகள்
3:05 PM, 22 Mar

கொரோனாவால் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் மார்ச் 31 வரை நிறுத்தம்
3:04 PM, 22 Mar

திண்டுக்கல்; மதுரை- பெங்களூர் புறவழிச்சாலை, திண்டுக்கல்
3:03 PM, 22 Mar

இடம்: திண்டுக்கல் - திருச்சி புறவழிச் சாலை
2:42 PM, 22 Mar

இன்றைய ஊரடங்கு உத்தரவு முடிந்ததும், கொரோனா வைரஸ் மாயமாகிவிடும் என நினைக்க வேண்டாம்- ஹர்ஷ்வர்த்தன். மக்களிடமிருந்து விலகி இருப்பது ஒரு பழக்கமாகவே மாறினால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று, மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கோரிக்கை
2:33 PM, 22 Mar

நாடு முழுக்க மார்ச் 31ம் தேதிவரை மெட்ரோ உட்பட அனைத்து வகை ரயில் இயக்கங்கள் ரத்து செய்யப்படுகிறது
2:27 PM, 22 Mar

சென்னை குரோம்பேட்டை மேம்பாலம் வெறிச்சோடி கிடக்கும் வீடியோ காட்சி
2:24 PM, 22 Mar

பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் பார்க்க முடியவில்லை, கால்நடைகள் மட்டுமே சாலைகளில் சுற்றி திரிகின்றன
2:14 PM, 22 Mar

நெல்லையப்பர் கோவில், தாமிரபரணி குளியல், நகை, ஜவுளிக்கடைகள் ஷாப்பிங் என பலதரப்பட்ட மக்களும் வந்து செல்லும், நெல்லை மாநகரம் வெறிச்சோடி கிடக்கும் காட்சிகள்
2:09 PM, 22 Mar

சென்னையில் பரபரப்பாக இயங்கும், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அமைந்தக்கரை பகுதிகள், ஆள் அரவமின்றி வெறிச்சோடி உள்ளன
1:52 PM, 22 Mar

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரம் வெறிச்சோடியுள்ள காட்சிகளை படங்களில் பார்க்கலாம்
READ MORE

Janatha curfew Latest live updates in Tamil
English summary
Join us for Latest live updates on Janatha curfew which is against corona virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X