சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் அதிக தொகுதிகளை வெல்லப்போவது எந்த கூட்டணி? வெளியான அதிரடி கருத்துக் கணிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் வெல்லப்போவது எந்த கூட்டணி?.. வெளியான கருத்துக் கணிப்பு- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக ஜன்கிபாத் என்ற பெயரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ரீபப்ளிக் பாரத் என்ற ஹிந்தி செய்தி தொலைக்காட்சியில், ஜன்கிபாத் என்ற பெயரில் இந்த கருத்துக் கணிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தின் கள நிலவரமும் ஆராயப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை பிடிக்கும் என்பது பற்றியும், இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக, அதிமுக

    திமுக, அதிமுக

    கருத்துக் கணிப்பு குறித்த சுவாரசிய முடிவுகளை பாருங்கள்: தமிழகத்தில் மொத்தம், 20,000 பேரிடம், இந்த கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே தமிழகத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதாகவும், ஆனால் இரு தரப்பிலும், கூட்டணி கட்சிகளால்தான் பல தொகுதிகள் இழக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கணிப்பு கூறுகிறது.

    வன்னியர்களுக்கு தர்மபுரியில் ஒரு தர்ம சங்கட சவால்... 3 வேட்பாளர்கள்... வாக்குகளை அள்ளப் போவது யார்? வன்னியர்களுக்கு தர்மபுரியில் ஒரு தர்ம சங்கட சவால்... 3 வேட்பாளர்கள்... வாக்குகளை அள்ளப் போவது யார்?

    அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்கள்

    அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்கள்

    சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்துக்கு மாற்றாக, இந்த கருத்துக் கணிப்பில் ஆச்சரியப்படத்தக்க ஒரு அம்சம் இடம் பெற்றுள்ளது. அது என்னவென்றால், அதிமுக கூட்டணி 20 முதல் 21 லோக்சபா தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதுதான். அதேநேரம், திமுக கூட்டணி 18-19 தொகுதிகளை மட்டுமே வெல்லக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

    லோக்சபா தேர்தலில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.. இது மக்களின் கருத்து கணிப்பு!

    டிரெண்ட் மாற்றம்

    டிரெண்ட் மாற்றம்

    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கருத்துக் கணிப்பு குழுவின் தலைமையாளர் பிரதீப் சில வாரங்கள் முன்பாக எடுத்த கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளில், 34 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாக கணித்திருந்தது. ஆனால், இப்போது டிரெண்ட் மாறியுள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    பாஜகவிற்கு கஷ்டம்.. காங்கிரஸ் நிலை என்ன தெரியுமா?.. அசத்தல் சர்வே இதோ!

    தேசிய அளவில் பாஜக கூட்டணி

    தேசிய அளவில் பாஜக கூட்டணி

    தேசிய அளவில் எடுத்துக் கொண்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 304 முதல் 316 தொகுதிகளை கைப்பற்றுமாம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 126 தொகுதிகள் முதல் 117 தொகுதிகள் வரை வெல்லக் கூடுமாம். பாஜக தனித்து 248 முதல் 260 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது. காங்கிரஸ் மட்டுமே தனித்து 73 முதல் 80 தொகுதிகளை வெல்லக்கூடுமாம்.

    பாஜக ஆதரவு டிவி

    பாஜக ஆதரவு டிவி

    ரீபப்ளிக் ஹிந்தி தொலைக்காட்சியான, ரீபப்ளிக் பாரத் சேனலில் இது வெளியாகியுள்ள நிலையில், திமுக தரப்போ, இந்த கருத்துக் கணிப்பில் நம்பிக்கையில்லை என கூறியுள்ளது. குறிப்பிட்ட சேனலின் முந்தையகால சர்வேக்கள், பாஜகவுக்கு ஆதரவாகவே இருந்ததாக திமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த சேனல் பத்திரிக்கையாளர் அர்ணாப் கோஸ்வாமி எடிட்டராக உள்ள ரீபப்ளிக் ஆங்கில சேனலின், ஹிந்தி சேனலாகும். அர்ணாப் தொடர்ச்சியாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை தனது செய்திகளில் வெளிப்படுத்தி வருபவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது கவனிக்கத்தக்கது.

    English summary
    Janki Baat opinion poll for Tamil Nadu shows huge surprise. AIADMK alliance poised to win 20-21 seats and DMK alliance to win 18-19 seats says pradip.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X