சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் போராட்டம்... வருகிற 22-ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்

Google Oneindia Tamil News

சென்னை: திட்டமிட்டவாறு ஜனவரி 22-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கொடுத்த உறுதியை ஜாக்டோ ஜியோ அமைப்பு திரும்ப பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் 22 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

January 22 onwards strike as scheduled, jacto geo announced

பழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடு, 21 மாத நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.

ஜாக்டோ-ஜியோ அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கை வருகிற 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

முன்னதாக, டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் போராட்டத்துக்கு தடைக்கேட்டு பொதுநலவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணையின் போது, கஜா புயல் நிவாரணப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதால், அதுவரை போராட்டத்தை ஒத்திவைக்க நீதிமன்றம் கேட்டுக்கொண்டதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Jacto Geo announce that strike will start on January 22 as planned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X