சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் வரலை.. வந்தால்தான் பேசுவார்.. ஜவாஹிருல்லா நக்கல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக எழுதி தருவதை படிக்கும் ரஜினி... கொதிக்கும் ஜவாஹிருல்லா!

    சென்னை: தாக்குதல் முலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தால் ஏமாற்றம்தான் கிடைக்கும் என ஜவாஹிருல்லா பேட்டி அளித்துள்ளார்.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:- குடியுரிமை திருத்த சட்டம், குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் குடியுரிமை கணக்கெடுப்பு பதிவெட்டை நடத்தக்கூடாது.

    சட்டமன்றத்தில் தீர்மான நிறைவேற்ற வேண்டும் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    சிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு?சிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு?

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    சென்னை வண்ணாரப்பேட்டையில் அரசியல் கட்சிகள், அமைப்புகளை சார்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் போலீஸ் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தி உள்ளது. போராட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்கள், பெண்கள் தாக்கப்பட்டு உள்ளனர். வீடியோக்களை தமிழக முதலமைச்சர் ஆய்வு செய்து தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசியல் கட்சிகள்

    அரசியல் கட்சிகள்

    டெல்லியில் ஷாகீன் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஜனநாயக குரலை நெறிப்பது போல் உள்ளது. வண்ணாரபேட்டையில் போராட்டம் நடத்த முயன்ற போது வேறு இடம் தருவதாக கூறிய போலீசார் வாக்குறுதியை காப்பாற்றவில்லை. தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகளின் கூட்டம் நடக்க உள்ளது.

    வேறுபாடு

    வேறுபாடு

    அதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பல மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும். என்.பி.ஆருக்கும் என்.ஆர்.சிக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பதில் எந்தவித ஆட்சேபனை கிடையாது.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ஆனால் குடியுரிமை பதிவெட்டின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. குடியுரிமையை சந்தேகிக்க கூடிய கணக்கெடுப்பு, திருத்த சட்டம் ஆகியவற்றை செய்வதில்லை என்று தமிழக அரசு முடிவு எடுக்கும் வரை போராட்டம் நிறுத்த போவதில்லை. சென்னையில் நடந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த்திற்கு பா.ஜ.க. எழுதி தரவில்லை.

    வசனங்கள்

    வசனங்கள்

    இதனால் வாய் திறக்கவில்லை. அசாமில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 19 லட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் பேசுவது வசனங்களை வாசிப்பவராக தான் உள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு லோல் தான் இருக்கும்.

    அடகு வைத்த ஆட்சி

    அடகு வைத்த ஆட்சி

    தமிழக நலனை பா.ஜ.க.விடம் அடகு வைத்த ஆட்சியாக எடப்பாடி பழனிசாமியின் 3 ஆண்டுக்கால ஆட்சி இருந்து உள்ளது. சென்னையில் நடந்த சம்பவம் போல் தமிழக வரலாற்றில் இதுவரை போலீஸ் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதில்லை. பெண்கள் கடுமையான தாக்குதல் நடத்து உள்ளன. இந்த தாக்குதல் முலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    Jawahirullah says that Rajinikanth has not received any script from BJP to talk about Chennai Washermenpet lathicharge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X