சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா எதிரொலி; வாழ்நாள் சிறைவாசிகளுக்கு நீண்ட கால விடுப்பு தருக - ஜவாஹிருல்லா

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீண்ட காலம் தண்டனை அனுபவித்துள்ள வாழ்நாள் சிறைவாசிகளுக்கு நீண்ட கால விடுப்பு அளிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

தனது கோரிக்கையை அன்புகூர்ந்து மருத்துவ மற்றும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கனிவோடு பரிசீலிக்க வேண்டும் என முதல்வரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

jawahirullah says, Long-term inmates should be granted long-term leave

இது தொடர்பாக அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு;

"கொரோனா நோய்க் கிருமி பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு சிறப்பான முன்முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தமிழக சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்கள் மற்றும் 44 முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறைவாசிகளுக்கும் நீண்ட கால விடுப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"கடந்த மார்ச் 24 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு கொரோனா அபாயத்தின் காரணமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதில் சிறைச்சாலைக்குள் பெருமளவில் சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும், சிறையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க வேண்டும். உடல் நலம் குன்றியவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டல்களை அளித்துள்ளனர்.

"தமிழக அரசுக்கு பிரத்யேகமாக இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்துள்ள வாழ்நாள் சிறைவாசிகளுக்கு விடுப்பு வழங்கினால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள அவர்கள் குடும்பத்தாரும் நிம்மதியான மனநிலையில் இந்த நெருக்கடியை தைரியமாக எதிர்கொள்வார்கள்.

"இச்சூழலில் தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்துள்ள அனைத்து கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அவர்கள் தம் உறவினர்களுடன் வீட்டில் இருக்கும் வகையில் நீண்ட கால விடுப்பு (பரோல்) அளிக்க முன்வரவேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

"தமிழக அரசுக்கு பிரத்யோகமாக இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்துள்ள வாழ்நாள் சிறைவாசிகளுக்கு விடுப்பு வழங்கினால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள அவர்கள் குடும்பத்தாரும் நிம்மதியான மனநிலையில் இந்த நெருக்கடியை தைரியமாக எதிர்கொள்வார்கள்.

English summary
jawahirullah says, Long-term inmates should be granted long-term leave
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X