எம்பி பதவி போனா என்ன? நமக்கு ’அது’ இருக்கே! பக்கா ப்ளான் போட்ட ஜெயக்குமார்! ஓகே சொன்ன எடப்பாடி?
சென்னை : ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து அதிமுக பொருளாளர் என்ற பதவியை பிடுங்கி எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஒருவருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியின் முதல் சாய்ஸாக ஜெயக்குமார் இருப்பதாக விவரங்கள் தெரிய வந்திருக்கிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது வெடித்த ஒற்றை தலைமை விவகாரம் பொதுக்குழு கூட்டத்தில் விசுவரூபம் எடுத்தது. கட்சியை முழு கட்டுப்பாட்டுக்குள் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்து இருப்பதையே நடந்து முடிந்த சம்பவங்கள் காட்டின.
அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் ஏன் ஓபிஎஸ் மூலம் பதவிக்கு கொண்டு வரப்பட்ட அவைத் தலைவரான தமிழ்மகன் உசேன் முதற்கொண்டு எடப்பாடி அணிக்குத் ஆகிவிட்டனர்.
சிக்கலை பாருங்க.. உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?

அதிமுக பொதுக்குழு
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ஆம் தேதி நடத்துவதற்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படவுள்ளார். ஓபிஎஸ்ஸிடம் இருக்கக்கூடிய பலமான பதவிகள் 2. அதிமுகவில் பொருளாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி. அவற்றில் முதலில் அதிமுக பொருளாளர் என்ற பதவியை அவரிடமிருந்து பிடுங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெயக்குமாருக்கு வாய்ப்பு
அவரிடமிருந்து பிடுங்கப்படும் பதவி எடப்பாடி தீவிர ஆதரவாளர்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் கேபி முனுசாமி திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஜெயக்குமார் எந்த முக்கியப் பதவியும் அதிகம் இல்லாமல் இருக்கிறார்.

எடப்பாடியின் தீவிர விசுவாசி
அதுமட்டுமில்லாமல் தற்போதைய நிலையில் எடப்பாடியின் தீவிர விசுவாசி ஆகியும் அவர் இருக்கிறார். சசிகலா எதிர்ப்பாக இருந்தாலும், திமுக எதிர்ப்பாக இருந்தாலும் அதிமுகவின் &எடப்பாடியின் குரலாக முன்னணியில் நின்று அடித்து ஆடக்கூடிய நபராக ஜெயக்குமார் இருக்கிறார். எனவே தனக்கு நம்பகத்தன்மையான விசுவாசமான ஆள் ஒருவரை அமைக்க திட்டமிட்டுள்ள எடப்பாடியின் முதல் சாய்ஸாக ஜெயக்குமார் இருப்பதாக விவரங்கள் தெரிய வந்திருக்கிறது.

ராஜ்யசபா சீட் மறுப்பு
ஏற்கனவே ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வெவ்வேறு துறைகளில் அமைச்சராகவும் சபாநாயகராகவும் பணியாற்றியவர் ஜெயக்குமார் என்பதால் நல்ல அனுபவம் கொண்டவராக இருக்கிறார் அவருக்கு சமீபத்தில் ராஜ்யசபா சீட் கேட்டபோது அதனை ஓபிஎஸ் மறுத்த காரணத்தால் தான் அவர் ஓபிஎஸ் விஷயத்தில் கூடுதல் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும் கூறப்படும் நிலையில் அதை இன்னும் தீவிரப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள எடப்பாடி ஜெயக்குமாருக்கு பொருளாளர் வாய்ப்பை கொடுக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.