எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் திடீர் மூடல்.. பொதுப் பணித் துறை அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பொது மக்கள் பார்வையிடுவதற்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைதூரத்தில் இருந்து வரும் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவருக்கு நினைவிடம் கட்டும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி ஜெயலலிதாவின் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம் திறக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா நினைவிடத்தையும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், அறிவுத் திறன் பூங்கா ஆகியவற்றையும் பொதுமக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது திடீரென எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சின்னத்துரை-ஸ்வேதா கல்யாணம்.. ஊரே மூக்கு மேல விரல வச்சிருச்சி.. சென்னை முழுக்க இப்போ இதே பேச்சுதான்!
இதுகுறித்து தமிழக பொதுப் பணித் துறை ஒரு அறிவிப்பு பலகையை வைத்துள்ளது. அதில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் நினைவிடங்கள் திடீரென மூடப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு, கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.