சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயலலிதா நினைவிடம்... இரவு பகலாக நடைபெறும் பணிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதா நினைவிடம்... இரவு பகலாக நடைபெறும் பணிகள்

    சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை விரைந்து கட்டி முடிக்கும் வகையில் இரவு பகலாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், எம்.ஜி.ஆர். நினைவிடத்தை புதுப்பிக்கும் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்கள் விரைவில் புதுப்பொலிவு பெற உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் இருந்து 138 தொழிலாளர்களை திரும்ப அழைத்தது மே.வங்க அரசுதீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் இருந்து 138 தொழிலாளர்களை திரும்ப அழைத்தது மே.வங்க அரசு

    ஜெயலலிதா நினைவிடம்

    ஜெயலலிதா நினைவிடம்

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் பிரம்மாண்ட நினைவிடம் கட்டி வருகிறது தமிழக அரசு. இதற்காக ரூ.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சர்வதேச தரத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஐ.ஐ.டி. டிசைன்

    ஐ.ஐ.டி. டிசைன்

    ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பாக பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் டிசைன் வடிவமைத்து கொடுத்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வடிவமைத்து கொடுத்த டிசைன் படி நினைவிடம் கட்டப்படுகிறது. பீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டு வருகின்றன.

    தீவிரமாக

    தீவிரமாக

    ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் போதிய அக்கறை காட்டவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இப்போது நினைவிடம் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து அதி நவீன கட்டுமான இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ஜெ.நினைவிடம் உருவாக்கப்படுகிறது.

    பிப்ரவரி 24-ம் தேதி

    பிப்ரவரி 24-ம் தேதி

    ஜெயலலிதா பிறந்தநாள் பிப்ரவரி 24-ம் தேதி என்பதால் அதற்குள் நினைவிட கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது பொதுப்பணித்துறை. தற்போது நவம்பர் மாதம் என்பதால் ஜனவரி இறுதிக்குள் பணிகளை முடித்து, அதற்கு பிறகு அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    தொண்டர்கள் மகிழ்ச்சி

    தொண்டர்கள் மகிழ்ச்சி

    எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுபிக்கப்படுவதாலும், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளதாலும் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    English summary
    jayalalitha memorial place construction work doing day and night in marina
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X