சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க அத்தையை அம்முன்னு கூப்பிடுவாங்க.. கோமளவல்லி கிடையாது.. தீபா திடுக் தகவல்!

ஜெயலலிதாவின் உண்மையான கோமளவள்ளி கிடையாது என தீபா கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் உண்மையான கோமளவள்ளி கிடையாது என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.

சர்கார் திரைப்படம் ரிலீஸ் ஆனதிலிருந்தே கோமளவள்ளி என்ற பெயர் தமிழகமெங்கும் உச்சரிக்க தொடங்கியது. அதற்க காரணம், கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர் என்ற தகவல் கசிந்ததால் எல்லோரும் கூகுளுக்குள் இந்த பெயரை தேட ஆரம்பித்தார்கள். இது உண்மையா, பொய்யா என இதுவரை தெரியவில்லை.

கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி கூடாது... கொந்தளிக்கும் பாஜக.. 9 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி கூடாது... கொந்தளிக்கும் பாஜக.. 9 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு

போராட்டமே நடந்துவிட்டது

போராட்டமே நடந்துவிட்டது

ஆனால் கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் பெயரே இல்லை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கருத்தும் தெரிவித்திருந்தார்கள். அதிமுக தரப்பில் போராட்டம் வரை சென்றதற்கு இந்த பெயர்கூட ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

கோமளவள்ளி இல்லை

கோமளவள்ளி இல்லை

எப்போதாவது ஒருமுறை தனது கருத்துக்களை தெரிவித்துவிட்டு போகும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதாவின் உண்மையாக பெயர் கோமளவள்ளி அல்ல என்று கூறியுள்ளார்.

அம்மு - செல்லப்பெயர்

அம்மு - செல்லப்பெயர்

இதுபற்றி ஜெ.தீபா கூறியபோது, "மறைந்த ஜெயலலிதா பற்றி என் அப்பாவுக்குத்தான் நல்லா தெரியும். அவர் எப்பவுமே ஜெயலலிதாவை அம்மு என்று செல்லப்பெயரில் தான் கூப்பிடுவார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள். அதனால் ஜெயலலிதா பெயர் கோமளவல்லி கிடையாது" என்றார்.

யார் இந்த கோமளவள்ளி?

யார் இந்த கோமளவள்ளி?

இன்னும் எத்தனை பேர் இது சம்பந்தமாக விளக்கம் தர போகிறார்களோ தெரியவில்லை. ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி இல்லை என்றால், அப்போ நிஜமான கோமளவள்ளி யார்? எங்கு இருக்கிறார்? இதைத்தானே மக்கள் இன்னமும் கூகுளில் ஓயாமல் தேடி கொண்டிருக்கிறார்கள்.

English summary
Jayalalitha name is not Komalavalli: J. Deepa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X