சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Jayalalithaa: ஜெ. வழியில் பயணிப்போம்.. மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்.. அதிமுக உறுதி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ. நினைவுநாள், அதிமுக, அமமுக இன்று மெரினா நோக்கி அமைதி ஊர்வலம்.

    சென்னை: ஜெயலலிதா காட்டிய வழியில் பயணம் செய்து தமிழக மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று அதிமுகவினர் உறுதி எடுத்துள்ளனர். ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அதிமுகவினர் அமைதி பேரணி அண்ணா சாலையிலிருந்து அவரது நினைவிடம் நோக்கி புறப்பட்டது.

    இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கருப்பு சட்டையில் பங்கேற்றனர். அப்போது இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பின்னர் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டு ஒருவழியாக அதிமுகவின் இரு அணிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றன.

    இவரது மறைவுக்கு பிறகு சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் ஜெ.வின் அண்ணன் மகள் ஜெ தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையையும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிட கழகம் என்ற கட்சியையும் தொடங்கியுள்ளனர்.

    அனுசரிப்பு

    அனுசரிப்பு

    இதனிடையே ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    கருப்பு சட்டை

    கருப்பு சட்டை

    இதையடுத்து அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வரும் துணை முதல்வரும் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே அமைதி ஊர்வலம் புறப்படத் தொடங்கியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு பங்கேற்றனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    அதுபோல் தினகரனின் அமமுக கட்சியும் அமைதி ஊர்வலத்தை தொடங்குகிறது. இந்த ஊர்வலமும் அண்ணா சாலையிலிருந்து புறப்படுகிறது என்பதால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு காணப்படுகிறது.

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    அஞ்சலி செலுத்திய பின்னர் உறுதிமொழியையும் அதிமுகவினர் ஏற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதியமொழியை வாசிக்க மற்றவர்கள் திரும்பக் கூறினர். ஜெயலலிதா காட்டிய வழியில் பயணம் செய்து தமிழக மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உழைப்போம். ஜெயலலிதாவின் அரசியல் மதிநுட்பத்தையும் மாநில சுயாட்சி உரிமைகளையும் மனதில் கொண்டு பணியாற்றுவோம். ஜெ.வின் பெருமைகளை மேலும் எடுத்துக் கூறி பணியாற்றுவோம். சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். ஒற்றுமையாக செயல்பட்டு கட்சியை கட்டிக் காப்போம். தமிழக மக்களுக்கு எப்போதும் பாதுகாவலர்களாக இருக்கும் வகையில் கடமைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    திவாகரனும் தங்கள் ஆதரவாளர்கள் சார்பில் பேரணி நடத்தவுள்ளார். ஜெயலலிதா நினைவிடத்துக்கு அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என அஞ்சலி செலுத்த வருகின்றனர். இதையொட்டி போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    {document1}

    English summary
    Jayalalitha's memorial day is being observed today. ADMK and AMMK observed peace rally from Anna statue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X