சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்.. அமைதி பேரணி தொடங்கியது.. கருப்பு சட்டையில் ஈபிஎஸ்- ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Jayalalitha's 3rd memorial day observed today | ADMk is arranging for peace rally

    சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமைதி பேரணி தொடங்கியது.

    ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Jayalalithas 3rd memorial day observed today

    இதனிடையே அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பிரார்த்தனைகளை வைத்தனர். எனினும் ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி காலமானதாக அறிவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வாலாஜா சாலையிலிருந்து அதிமுகவின் அமைதி பேரணி தொடங்கியது.

    ஜெயலலிதா இல்லாத 3 ஆண்டுகள்... கட்சியும், ஆட்சியும் எப்படி இருக்கிறது? ஜெயலலிதா இல்லாத 3 ஆண்டுகள்... கட்சியும், ஆட்சியும் எப்படி இருக்கிறது?

    இந்த பேரணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கருப்பு சட்டையில் பேரணியில் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. வாலாஜா சாலை, மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேரணியையொட்டி அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நினைவிட கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடையாத நிலையில் அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    English summary
    EX CM of Tamilnadu Jayalalitha's 3rd memorial day observed today. ADMk is arranging for peace rally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X