சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது.. 75 நாளில் ரூ.1.17 கோடிக்கு ஜெயலலிதா சாப்பிட்டாரா.. அதிர வைக்கும் அப்பல்லோ பில்!

ஜெயலலிதா சிகிச்சையின்போது உணவு செலவு ரூ. 1.17 கோடி என அப்பல்லோ கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: என்னாது... ஜெயலலிதா ரூ. 1.17 கோடிக்கு சாப்பாடு சாப்பிட்டாரா?

ஜெயலலிதா சாகும்போது வயசு 68. உடம்பில் ஏகப்பட்ட கோளாறு. இதற்காக பல வருடங்களாகவே ட்ரீட்மெண்ட் எடுத்துகொண்டு வருவதை நாடறியும்.

அதுவும் கடைசியாக அப்போலோவில் சேர்க்கும்போது உடம்பு இன்னும் மோசமாகி விட்டது. எதற்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள் என்பது இப்போது வரை புரியாத புதிராக இருந்தாலும் (அதற்காகத்தான் ஆறுமுகசாமி கமிஷனே விசாரித்து வருகிறது), யூகித்து சொல்வதானாலும் தள்ளாமை, குடிகொண்ட நோய்களின் வீரியம் காரணமாக மோசமானது.

என்ன பிரச்சனையால் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து மருத்துவமனை தரப்பு ஒரு காரணம் சொல்கிறது, கூடவே இருந்து கவனித்து கொண்டவர்கள் இன்னொரு காரணம் சொல்லுகிறார்கள்.

1.17 கோடி ரூபாய்?

1.17 கோடி ரூபாய்?

எப்படி பார்த்தாலும் அப்போலோவுக்கு ஒரு நபரை கொண்டு செல்கிறார்கள் என்றாலே கொஞ்சம் சீரியஸ் விஷயம்தான். அப்படி இருக்கும்போது, ஜெயலலிதா உணவுக்கான செலவு மட்டும் ரூ. 1.17 கோடி எனவும் அப்பல்லோ மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. இவ்வளவு ரூபாய்க்கா ஜெயலலிதா சாப்பிட்டிருப்பார்?

பொங்கல், இட்லி

பொங்கல், இட்லி

முன்பு ஒருமுறை சசிகலா உறவினர் என்ற அடிப்படையில் கிருஷ்ணபிரியா ஆணையம் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது,"ஜெயலலிதா உடல்நலம் தேறிவந்தபோது, இட்லி, பொங்கல், தக்காளி சாதம் ஆகியவற்றை சிறிய அளவு சாப்பிட்டார், ஐஸ்கிரீம் கூட சிறிதளவு சாப்பிட்டார். ஜெயலலிதாவுக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும். சிகிச்சையின் போது ஒருமுறை திராட்சை சாப்பிடுகையில் அவருக்கு இருமல் வந்துவிட்டது" என்று வாக்குமூலமாக கூறினார்.

ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?

ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?

ஒரு ஹார்ட் பேஷன்ட், அதுவும் முற்றிய சர்க்கரை நோயாளி எப்படி ஐஸ்கிரீம் சாப்பிட்டிருப்பார்? என்ற கேள்வி மண்டையை குழப்புகிறது. சிகிச்சையின் கடைசி காலம் வரை லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர் என முக்கியமானவர்கள் வந்து சிகிச்சை அளித்த சமயத்தில், தக்காளி சாதமும், பொங்கலும் ஜெயலலிதா சாப்பிட்டிருப்பாரா?

தக்காளி சாதம்

தக்காளி சாதம்

அப்படியே சாப்பிட்டாலும் தக்காளி சாதம், பொங்கல், ஐஸ்கிரீமுக்கு இவ்வளவு விலை ஆகுமா? இன்னொரு பக்கம் ஜெயலலிதா இட்லியும் சாப்பிடல, சட்னியும் சாப்பிடல என்று அதிமுக தரப்பில் பகீர் கிளப்பினார்கள். எனவே ஜெயலலிதா ரூ. 1.17 கோடிக்கு என்னதான் அப்படி சாப்பிட்டிருப்பார்? கிருஷ்ணபிரியா சொன்னதுபோலவே ஜெயலலிதா சாப்பிட்டிருந்தால், அந்த சாப்பாட்டு மெனுவிற்கா இவ்வளவு தொகை ஆனது?

எது உண்மை?

எது உண்மை?

ஒருவேளை அதிமுகவினர் சொன்னதுபோல் இட்லி, சட்னி என எதுவுமே இல்லை என்பதை எடுத்து கொண்டால், பிறகு ஜெயலலிதா என்ன சாப்பிட்டு இவ்வளவு தொகை ஆனது? எனவே அப்போலோ அளித்துள்ள இந்த ஜெயலலிதாவின் சாப்பாட்டு மெனுவின் மீதான உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இப்போது நிறையவே ஏற்பட்டுள்ளது,

English summary
Apollo Hospital submits record in Arumugasamy Commission about Jayalalitha's Food costs is Rs.1.17 crore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X