சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த்தைவிட கமல்ஹாசனுக்கே மக்கள் ஆதரவு அதிகம்.. இந்தியா டுடே சர்வே

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?- ஒரு பரபரப்பு சர்வே- வீடியோ

    சென்னை: ஜெயலலிதாவின் இடத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைாவர் கமல்ஹாசன் நிரப்புவார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக அரசியலில் நாள்தோறும் ஒரு கட்சிகள் முளைகின்றன. இதில் பெரும்பாலானவை நடிகர்களின் கட்சிகளாகும். கமல் கட்சி தொடங்கிவிட்டார். விஜய் தொடங்கும் முடிவில் இருக்கிறார், சிம்பும் ரேஸில் இருக்கிறார்.

    ஆனால் ரஜினிகாந்த் கட்சியை தொடங்குவது குறித்து எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்காமல் இருக்கிறார். அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் சொன்னபோது தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப நான் வருகிறேன் என்றார் ரஜினி.

    [தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?- கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட கேப்டன்... ஒரு பரபரப்பு சர்வே]

    ரஜினியை முந்திய கமல்

    ரஜினியை முந்திய கமல்

    இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த முதல்வர் யாரென்ற சர்வேயை இந்தியா டுடே எடுத்தது. அதில் ஸ்டாலின்தான் என 41 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இந்நிலையில் மக்களால் பெரிதும் போற்றுதலுக்குரிய நபரான ரஜினிகாந்தை கமல்ஹாசன் முந்தியுள்ளார்.

    மக்கள் கவனிப்பு

    மக்கள் கவனிப்பு

    ரஜினிகாந்த் முதல்வராக வர வேண்டும் என 7 சதவீத மக்கள் விரும்பியுள்ளனர். ஆனால் கமல்ஹாசன் முதல்வராக வர வேண்டும் என 8 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 7க்கும் 8-க்கும் பெரிதும் வித்தியாசம் இல்லை என பார்க்கப்பட்டதாலும் ரஜினியின் அரசியல் கொள்கைகளையும் கமலின் அரசியல் கொள்கையையும் மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர் என்பதையே காட்டுகிறது.

    கமல் பார்க்கிறார்

    கமல் பார்க்கிறார்

    எப்போதும் தனது நிலைப்பாட்டில் உறுதியில்லாதவர் ரஜினிகாந்த் என மக்களால் அறியப்படுகிறார். ஆனால் கமல்ஹாசனோ கட்சியை தொடங்கிவிட்டு சும்மா இருக்காமல் பல்வேறு ஊர்களுக்கு சென்று மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து வருகிறார். தம் கட்சி வெற்றி பெறுமா என்று பாராமல் தம்மால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கமல் பார்க்கிறார்.

    ஜெ. இடத்தை

    ஜெ. இடத்தை

    ஆனால் ரஜினியோ ரசிகர்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறார். இவரது பேச்சால் மக்களும் குழப்பத்தில் உள்ளனர். எனவேதான் ரஜினிகாந்த் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் இடத்தை கமல் நிரப்புவார் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் திமுகவில் கருணாநிதியால் வெற்றிடம் என்று இருந்தாலும் அதை ஸ்டாலின் நிரப்புவார் என்று அரசியல் நோக்காளர்கள் கருத்து

    English summary
    Jayalalitha's place will be filled by Rajinikanth or Kamal haasan? A survey in India Today reveals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X