சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி பொதுமக்கள் பார்வைக்கு.. நினைவில்லமாகும் ஜெயலலிதாவின் வேதா இல்லம்.. தமிழக அரசு அவசர சட்டம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லத்தில்தான் வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பின் அந்த வீடு பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஏற்கனவே வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

Jayalalithas Poes Gardens Vedha Illam will be transferred into memorial

இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. தற்போது 3 ஆண்டு கழித்து இது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் இங்கெல்லாம் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. இதுதான் காரணம்.. வெதர்மேன் சொன்ன விளக்கம்!தமிழகத்தில் இங்கெல்லாம் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. இதுதான் காரணம்.. வெதர்மேன் சொன்ன விளக்கம்!

இதற்காக அறக்கட்டளை உருவாக்கப்படும். தமிழக முதல்வர் இதன் தலைவராக இருப்பார். துணை முதல்வர், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்த வீடு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது, என்று அரசு கூறியுள்ளது.

English summary
Former TN chief Minister Jayalalitha's Poes Garden's Vedha Illam will be transferred into memorial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X