சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu ByElection 2019 : தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

    சென்னை: நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில் 38 தொகுதி மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை, எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தை பொறுத்த வரை இடைத்தேர்தல் முடிவுகளை மக்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அதிமுக ஆட்சி அமைய காரணமாக இருந்த மறைந்த ஜெயலலிதா, கடந்த 2016-ல் இதே நாளில் அதாவது மே 23-ம் தேதி தான் தமிழக முதல்வராக பதவியேற்று கொண்டார்.

    Jayalalitha took over as CM.. that same day Go to the caps of the AIADMK government

    அந்த தேர்தலின் போது 234 சட்டசபை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அதிமுக, கருத்து கணிப்புகளை பொய்யாக்கி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

    ராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்! ராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்!

    பின்னர் 6-வது முறையாக முதல்வர் பதவியேற்ற ஜெயலலிதா, அடுத்த சில மாதங்களில் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் அமைத்து கொடுத்த ஆட்சியில் பல்வேறு அதிரடி திருப்பங்களுக்கு இடையே எடப்பாடிபழனிசாமி முதல்வராக நீடிக்கிறார்.

    இந்நிலையில் ஜெயலலிதா அமைத்த ஆட்சியின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முடிவுகளாக, 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. அதிமுக ஆட்சி தொடர்ந்து இருக்க போகிறதா, இல்லையா என்பது 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையும்.

    கடந்த 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற, அதே நாளான இன்று அவர் அமைத்த ஆட்சியின் தலையெழுத்து முடிவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The counting of votes counted in the Lok Sabha election and state assembly elections has been underway.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X