சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு.. தீபா தெரிவித்த அச்சம்.. 2 இயக்குனர்களுக்கும் ஹைகோர்ட் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிக்க கோரி தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் மேனன் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதே போல் கெளதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

திருக்குறளில் ஜாதி இல்லை.. தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.. திருமுருகன் காந்தி அதிரடி கருத்து!திருக்குறளில் ஜாதி இல்லை.. தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.. திருமுருகன் காந்தி அதிரடி கருத்து!

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வாழ்க்கை சம்பவங்கள்

வாழ்க்கை சம்பவங்கள்

இந்த வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தனக்கு தெரியும் என்றும் படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்புள்ளதால், தன்னுடைய அனுமதி இல்லாமல் படங்கள் எடுக்க அனுமதிக்க கூடாது என தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

சித்தரிக்கப்படலாம்

சித்தரிக்கப்படலாம்

மேலும், இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்த தீபா தரப்பு, ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது..

இயக்குனர்களுக்கு

இயக்குனர்களுக்கு

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இது தொடர்பாக நவம்பர் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் மேனன் உள்ளிடோருக்கு உத்தரவிட்டார்.

English summary
Madras High Court issues notice to director vijay and gautham menon after j deepa case over to ban Jayalalithaa Biography Movies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X