சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்.. போக்குவரத்து மாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுக்க இருந்து அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Recommended Video

    மக்கள் பார்வைக்கு தயாராகும் ஜெயலலிதா இல்லம்

    இதன் காரணமாக மெரினா கடற்கரையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் அதிமுக தொண்டர்களால் நிறைந்து காணப்படுவதால் மெரினா கடற்கரை இந்தப்பக்கம் இடம்பெயர்ந்து வந்து விட்டது என்று தோன்றும் அளவுக்கு கூட்டம் காணப்படுகிறது.

    பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, தஞ்சை, வேலூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் சென்னையில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

    எங்கு பார்த்தாலும் மனித தலைகள்

    எங்கு பார்த்தாலும் மனித தலைகள்

    இன்று காலை முதல் அவர்கள் மெரினா கடற்கரையில் வந்து ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டபடி உள்ளனர். எனவே எங்கு நோக்கினும் மனித தலைகளாக காணப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    காமராஜர் சாலையில், வார் மொமோரியலில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

    போக்குவரத்து மாற்றம்

    போக்குவரத்து மாற்றம்

    அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வை சென்றடையலாம்.

    அடையார் டூ காமராஜர் சாலை

    அடையார் டூ காமராஜர் சாலை

    அடையார் பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் கச்கேரி சாலை நோக்கி திருப்பப்படும். அவைகள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வை சென்றடையலாம். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் மாநகர பேருந்து தடம் எண்.27 டி ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடையலாம்.

    மயிலாப்பூர் சந்திப்பு

    மயிலாப்பூர் சந்திப்பு

    அதே போன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண்.21 ஜி ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு, அவை ராயப்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வை சென்றடையலாம்.

    அண்ணா சதுக்கம்

    அண்ணா சதுக்கம்

    மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண்.45 பி மற்றும் 12 ஜி ஆகியவை ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு, ராயப்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம் வழி வந்து ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிறுத்தப்படும்.

    காந்தி சிலை செல்லும் வாகனங்கள்

    காந்தி சிலை செல்லும் வாகனங்கள்

    டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சந்திப்பிலிருந்து காரணீஸ்வர் கோவில் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் திருவல்லிக்கேனி ஹைரோடு வழியாக விடப்படும்

    அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தம்

    அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தம்

    அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, ஹைரோடு, ஹ்ஸ், ஆர்.கே.மட் ரோடு வழியாக அடையாறு சென்றடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    AIADMK men from all over Tamil Nadu have gathered in Chennai for the inauguration of the former Chief Minister Jayalalithaa Memorial. Due to this traffic has been diverted in various areas around Marina Beach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X