சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவதற்கும், அதற்கு இழப்பீடு நிர்ணயித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீபக் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அதை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இடத்துக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நிலையத்தை அரசுடைமை ஆக்கியதாக அரசு அறிவித்தது.

Jayalalithaas house into a memorial house - High Court adjourns Deepak case

இதற்கிடையில் வேதா நிலையத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபக் தரப்பிலும், இழப்பீடு நிர்ணயித்து அதை எதிர்த்து தீபா தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரு வழக்குகளையும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தனி நீதிபதி பரிந்துரைத்திருந்தார்.

இன்னிலையில் தீபக் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

பார்க்கவே ஷாக்கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோபார்க்கவே ஷாக்கா இருக்கு.. கோழிக்கோட்டில் விமானம் இப்படித்தான் உடைந்து கிடந்தது.. சாட்டிலைட் போட்டோ

அப்போது தீபாவின் மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இரு வழக்குகளின் விசாரணையும் அடுத்த வாரம் நடைபெறும் எனக் கூறி ஒத்திவைத்தனர்.

English summary
The Chennai High Court has adjourned till next week the hearing of a case filed by Deepak against the conversion of Jayalalithaa's Vedha Nilayam house into a memorial house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X