சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேதாநிலையத்தை அரசு இல்லமாக கையகப்படுத்த ஆளுநர் அவசர சட்டம் - ஹைகோர்ட் நோட்டீஸ்

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமைக்கி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு, ஆளுநர் செயலாளர

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விடான வேதா நிலையத்தை கையகப்படுத்த ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு, ஆளுநர் செயலாளர் உள்ளிட்டோர் 6 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமைக்கி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Jayalalithaas Vedhanilayam into a memorial - High Court issue notice TN government

அவர் தனது மனுவில், வேதா நிலையம் அமைந்துள்ள நிலம் தனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சகோதரி தீபாவுடன் வேதா நிலையத்தில் சிறு வயதில் வளர்ந்தாகவும், பாட்டி சந்தியா மரணத்துக்கு பின் வேதா நிலையத்தில் வசித்து வந்த தன் அத்தை ஜெயலலிதா பல்வேறு முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளை அங்கு நடத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஜெயலலிதா இறந்த பின்னர், தங்களை வாரிசுகளாக அறிவிக்க கோரி தானும், தன் சகோதரி தீபாவும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வேதா நிலையத்தையும், அங்கு உள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆயுர்வேதம்...குஜராத்துக்கு முக்கியத்தும்...கேரளா தமிழ்நாடு புறக்கணிப்பு...ராஜ்ய சபாவில் எதிர்ப்பு!!ஆயுர்வேதம்...குஜராத்துக்கு முக்கியத்தும்...கேரளா தமிழ்நாடு புறக்கணிப்பு...ராஜ்ய சபாவில் எதிர்ப்பு!!

தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை எனவும் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் குறித்த உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, வேதா நிலையத்தை அரசுடமையாக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

Jayalalithaas Vedhanilayam into a memorial - High Court issue notice TN government

இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து, ஆளுநர் செயலாளர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலாளர் மற்றும் இயக்குனர், சட்ட துறை செயலாளர் ஆகியோர் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

English summary
The Chennai High Court has ordered the Tamil Nadu government, including the secretary to the governor, to respond within six weeks to Deepak's case against the governor's emergency order to take over the Vedha Nilayam of former chief minister Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X