சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏட்டு பார்த்திபனுடன் முதல் சந்திப்பு.. கோயம்பேடு ஜெயந்தி பரபர வாக்குமூலம்!

ஜெயந்தி - பார்த்திபன் முதல் சந்திப்பு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    30 வயது பெண்ணை வைத்து விபச்சாரம்.. ஏட்டு சஸ்பெண்ட்-வீடியோ

    சென்னை: ஜெயந்திக்கும், ஏட்டு பார்த்திபனுக்கும் முதல் சந்திப்பு கோயம்பேடு பஸ் ஸ்டேண்டலதானாம்.

    அரும்பாக்கத்தில் வசித்து வரும் ஜெயந்தி விபச்சாரம் செய்து வந்திருக்கிறார். இவருடன் சேர்ந்து இந்த தொழிலை ஜரூராக நடத்த உதவியது பார்த்திபன்தான்.

    முதன்முதலாக ஜெயந்தி பஸ்சுக்காக கோயம்பேட்டில் காத்திருந்தாராம். அப்போதுதான் ஏட்டு அந்த பக்கமாக வந்திருக்கிறார். பேச்சும் கொடுத்திருக்கிறார். பிறகு விசாரணைக்காக ஸ்டேஷன் வரை கூட்டிட்டு போயிருக்கார். அப்போது ஜெயந்தி தன் வீட்டு கதையெல்லாம் கண்ணீர் வழிய சொல்லவும், ஏட்டுவுக்கு ஜெயந்தி மேல் பரிதாபம் வந்திருக்கிறது.

    பண வேட்டை

    பண வேட்டை

    அப்போதிலிருந்துதான் 2 பேருக்கும் நெருக்கம் அதிகமாகி இருக்கிறது. விபச்சாரம் செய்ய ஜெயந்திக்கு ஏட்டு வீடு எடுத்து தந்திருக்கிறார். ஒரு பக்கம் கஸ்டமர்கள் மூலம் ஜெயந்திக்கு பணம் என்றால் மற்றொரு பக்கம் போலி ரெய்டு மூலம் ஏட்டுவுக்கு பணம். இப்படிதான் ரெண்டு பேரும் இவ்வளவு நாள் கலக்கியிருக்கிறார்கள்.

    கால்டாக்சி டிரைவர்

    கால்டாக்சி டிரைவர்

    ஆனால் கஸ்டமர் கால் டாக்சி டிரைவர் விசுவநாதன் ஜெயந்தி வீட்டுக்கு வந்தபோதுதான் பண தகராறு வெடித்தது. இருவரும் ஜாலியாக இருப்பதற்கு 2000 ஜெயந்தி கேட்டுள்ளார். ஆனால் 1500 தான் தருவேன் என டிரைவர் கூறியுள்ளார். முதலில் சரி என்று சொல்லிவிட்டு, பிறகுதான் எக்ஸ்ட்ரா பணத்தை ஜெயந்தி கேட்டுள்ளார். அதற்கு காரணம் விசுவநாதனிடம் நிறைய பணம் இருந்ததை பார்த்துவிட்டார்.

    ஏட்டுவின் பிளான்

    ஏட்டுவின் பிளான்

    இதுதான் தகராறாக வெடித்திருக்கிறது. உடனே ஜெயந்தி ஏட்டுக்கு போன் பண்ணவும், அவர் விரைந்து வந்து விசுவநாதனை அடித்து உதைத்து பைக்கையும் பிடுங்கி உள்ளார். விசுவநாதனிடம் இருந்த பணத்தையும் 2 பேரும் பிடுங்கி கொண்டனர். விசுவநாதனை தூக்கி உள்ளே வைக்க ஜெயந்தியும், ஏட்டுவும் பிளான் பண்ணினார்கள். இன்னொரு பக்கம் விசுவநாதன் போலிசில் புகார் சொன்னார். அதில் இருவரும் சிக்கிக் கொண்டனர்.

    தனிப்படை

    தனிப்படை

    தற்போது ஜெயந்தி புழலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். அவரது வாயிலிருந்து இதுவரை ஏட்டு பார்த்திபனை தெரியும் என்று மட்டும் ஒரு வார்த்தை வந்திருக்கிறதாம். இப்போதைக்கு வேறு எதையும் அவர் சொல்லவில்லை போலிருக்கிறது. ஆனால் ஏட்டுவை காணவில்லை என்பதால் அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    செல்போன் ஆய்வு

    செல்போன் ஆய்வு

    ஜெயந்தியின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் சில வீடியோக்களும் இருக்கிறதாம். இதில்தான் எக்கச்சக்கமான விஷயம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஏட்டுவும், ஜெயந்தியும் சேர்ந்து ஏதாவது பெண்களை தங்கள் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்களா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    50-க்கும் மேற்பட்ட பெண்கள்

    50-க்கும் மேற்பட்ட பெண்கள்

    ஏனென்றால், வீட்டை விட்டு ஓடிவரும் பெண்களை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் டியூட்டியின்போது கண்காணிப்பாராம். மெதுவாக பேச்சும் தருவாராம். பாதுகாப்பாக கொண்டு விடுவதாக அழைத்து ஜெயந்தியிடம் கூட்டி வருவாராம். அங்கு வைத்து மிரட்டி, கட்டாயமாக அந்த தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார் என்றும், இப்படி 50-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சீரழித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

    விசாரணை

    விசாரணை

    ஒன்று, ஜெயந்தியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும், அல்லது ஏட்டுவை கண்டுபிடித்து விசாரிக்க வேண்டும், இவ்வாறு செய்தால்தான் இந்த விஷயம் தொடர்பாக மேலும் பல சமாச்சாரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Jayanthi and Head Constable Met in Koyambedu Busstand
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X