சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: வளைகுடாவில் பறிமுதல் செய்யப்பட்ட டேங்கரை ஈரான் விடுவிக்கவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் ஜெரிமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.

23 பேர் சென்ற, 'ஸ்டீனா இம்பேரோ' கப்பல் ஈரானை நோக்கி வடக்கில் சென்றுக் கொண்டிருந்தது. பிரிட்டனுக்கு சொந்தமான லைபீரியாவின் கொடி தாங்கிய இன்னொரு கப்பல் ஒன்றும், ஆயுதப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

Jeremy Hunt warns Iran against choosing dangerous path

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் நிலவிக் கொண்டிருக்கும் சூழலில் இந்த பிரச்சனை நடைபெற்றுள்ளதால் பதற்றம் அதிகரிததுள்ளது. அந்த கப்பல் ஈரானிய புரட்சிகர் காவல் படையால் கைப்பற்றப்பட்டது என்று ஈரான் நாட்டு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி

பிரிட்டன் கப்பல் ஜிபிஎஸ்ஸை அணைத்தது, ஹார்மோஸ் ஜலசந்திக்குள் நுழையாமல், எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தி விட்டு வெளியே சென்றது, என்று அந்த செய்தி கூறியுள்ளது.

முன்னதாக, ஜூலை 11ஆம் தேதியன்று, வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க ஈரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

வளைகுடாவில் பிரிட்டிஷ் கொடியிடப்பட்ட கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதன் மூலம் ஈரான் "சட்டவிரோத மற்றும் ஸ்திரமின்மைக்குரிய" நடத்தைக்கான "ஆபத்தான பாதையை" தேர்வு செய்துள்ளது என்று பிரிட்டன் வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் எச்சரித்துள்ளார்.

English summary
Iran may be choosing a "dangerous path" of "illegal and destabilising" behaviour after its authorities seized a British-flagged tanker in the Gulf, the foreign secretary has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X