சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் மாவோயிஸ்ட் கைது..! எண்ணூரில் பதுங்கியிருந்த போது சுற்றி வளைத்து பிடித்தனர் போலீசார்!

Google Oneindia Tamil News

சென்னை: ஜார்கண்ட் போலீசால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் சென்னை எண்ணூாில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பற்றி அம்மாநில போலீசார் அளித்த தகவலின் பேரில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

    சென்னையில் மாவோயிஸ்ட் கைது.. ஜார்க்கண்டில் தேடப்ட்ட நபர் எண்ணூரில் சுற்றி வளைப்பு.. திடுக் தகவல்

    எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை - 8 மணி நேர விசாரணை... விரைவில் கைது? எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை - 8 மணி நேர விசாரணை... விரைவில் கைது?

    மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலம் ஜார்கண்ட் . இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் மீது 14 வழக்குகள் இருந்த நிலையில் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரியாததால், அவரை ஜார்க்கண்ட் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    சென்னை எண்ணூர்

    சென்னை எண்ணூர்

    இந்நிலையில் ஜார்க்கண்டில் தப்பியோடிய மாவோயிஸ்ட், சென்னை எண்ணூர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து கொண்டிருப்பதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது ஜார்கண்ட் மாநில போலீசார் செல்போன் டவர் மூலம் கண்டறிந்து சென்னை எண்ணூர் போலீசுக்கு தகவல் அளித்தனர்,

    மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச்

    மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச்

    அவர்கள் அளித்த தகவலின் பேரில் சென்னை எண்ணூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உதவி ஆணையர் பிரம்மானந்தம் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் செல்போன் டவரை வைத்து சோதனை மேற்கொண்டபோது எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் எண்ணூர் தெர்மல் அனல் மின் நிலைய அருகே கட்டுமான பணிகளில் பணியில் மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது,.

    விசாரணை

    விசாரணை

    இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஜார்கண்ட் மாநிலம் அசரிபாக் மாவட்டத்தை சேர்ந்த சுகார் கஞ்ச் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர் விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபக் காம்ரேட் மாவோயிஸ்ட் கூட்டத்தை சேர்ந்தவர் என்பதும் எதற்காக கட்டுமான பணிகளில் தங்கி பணிகளை மேற்கொண்டு வந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியிடம் பேசினார்

    மனைவியிடம் பேசினார்

    இதனிடையே மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் கைது குறித்து போலீசார் வெளியிட்ட செய்தியில், "சுக்கர் கஞ்சு(31) (மவோயிஸ்ட் தீபக் காம்ரேட் அணியை சேர்ந்தவர்), த/பெ.கமல் கஞ்சு, பூச்சாட்திக் கிராமம், கேராதாரி போஸ்ட், அசாரிபாக் மாவட்டம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் எண்ணூர் அனல் மின் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் Contract ல் சுரேஷ் என்பவரிடம் கடந்த 9 மாதமாக தங்கி இங்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளதால். மேலும் இவர் தனது மனைவிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணின் டவர் லோக்கேஷன் மூலம் அறிந்த ஜார்க்கண்ட் மாநில போலீசார் சென்னை மாநகர காவல் ஆணையளார் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    விசாரணை தீவிரம்

    விசாரணை தீவிரம்

    அதன்பேரில் எண்ணூர் AC Spl Team SI நந்தகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் 26.10.2021 ம் தேதி 18, 30 மணிக்கு மேற்படி நபரை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில். அவர் மீது ஜார்கண்ட் மாநிலம் பல வழக்கில் தேடப்பட்டு வருவதும், கஞ்ச் மீது செக்சன் 302 கொலை வழக்கு 2, 2) 307 கொலை முயற்சி 3 வழக்கும், 3) வெடி குண்டு வீசியது தொடர்பான வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    English summary
    Maoist Sukar Gunj, wanted by Jharkhand police, has been arrested in Chennai. Several cases are pending against Maoist Sukar Gunj in Jharkhand. He has been arrested by the Tamil Nadu police on the information provided by the state police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X