சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடிவுக்கு வந்தது இலவச அழைப்பு.. மற்ற நெட்வொர்க்குடன் பேசினால் காசு.. ஜியோ அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Reliance jio stops free voice calls| இலவச அழைப்புகளை நிறுத்தும் ஜியோ நிறுவனம்

    டெல்லி: இலவச அழைப்பு முடிவுக்கு வந்திடுச்சு.. இனி யாரும் ஒசியில பேச முடியாது. ஜியோ நிறுவனம் சக போட்டி நிறுவனங்களான வோடாபோன், ஏர்டெல், பிஎஸ்என்எல் உள்ளிட்டமற்ற சந்தாதாரர்களுடன் பேசுவதற்கு நிமிடத்திற்கு ஆறு பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

    அதற்கு பதில் கூடுதலாக இலவச டேட்டா தருகிறோம் என ஜியோ வாடிக்கையாளர்களை சமாதானம் செய்யும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மூன்று வருடங்களுக்கு முன்பு 4ஜி ஸ்மார்ட்போன் வச்சிருந்தா ஓசியில் சிம்மு, 6 மாசத்திற்கு அன்லிமிடெட் டேட்டா, யாரு கூட வேண்டுமானாலும் எவ்வளவுநேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்ற பிரம்மாண்ட அறிவிப்புடன் இந்திய சந்தையில் கால் பதித்தது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

    தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு 'வாவ்' அறிவிப்புதீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு 'வாவ்' அறிவிப்பு

    இலவச டேட்டா

    இலவச டேட்டா

    இதனால் அதுவரை 3ஜி போன் வச்சிருந்த அத்தனை பேரும் ஒடிப்போய் முதல்வரிசையில் நின்று 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கி ஜியோ சிம்மை சொருகினார்கள். அதன்பிறகு சில மாதங்கள் இலவச அழைப்பு மற்றும் அன்லிமிடெட் டேட்டா சலுகைகளை அனுபவித்த வாடிக்கையாளர்கள், அதற்கு தங்களை பழக்கிக் கொண்டு ஜியோவில் ஆயுட்கால சந்தாதாரர்களாக இணைந்தனர். அதன்பிறகு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்து சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்.

    ஐசியூ சார்ஜ் கட்டணம்

    ஐசியூ சார்ஜ் கட்டணம்

    இப்படி நன்றாக மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், திடீரென ஜியோவை தவிர மற்ற நிறுவனங்களுடன் பேச நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது அதென்ன நிமிடத்திற்கு 6 பைசா என்று கேட்டால் அதற்கும் ஜியோவிடம் பதில் அளிக்கிறது. ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் மற்ற நிறுவனங்களுடன் அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதை ஆங்கிலத்தில் Interconnect Usage Charge என்று அழைப்பார்கள். இந்த கட்டணத்தைதான் ஜியோ வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

    நிமிடத்திற்கு 6 பைசா

    நிமிடத்திற்கு 6 பைசா

    ஜியோ வெளியிட்ட அறிக்கையில், இனி ஜியோ வாடிக்கையாளர்கள், வேறு நெட்வொர்க்குகளில் உள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளும் போது, ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் . இப்படி ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்குக்கு கால் செய்யும் போது, ஐயூசி கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்கிற விதி மாற்றப்படும் வரை இனி ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த 6 பைசா கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    இலவச டேட்டா

    இலவச டேட்டா

    ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 13,500 கோடி ரூபாயை, இந்த ஐயூசி கட்டணங்களாக பார்தி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களுக்கு கட்டணமாகச் செலுத்தி உள்ளது. தற்போது, இந்த இழப்பை ஈடுகட்டவே இப்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கு பதில் இலவசமாக கூடுதல் டேட்டா தருவதாக கூறியுள்ளது. இதன் மூலம் மூன்று வருடத்திற்கு பிறகு முதல்முறையாக அழைப்புக்கு கட்டணம் வசூலிக்க உள்ளது ஜியோ.

    வாட்ஸ் அப் இருக்குல்ல

    வாட்ஸ் அப் இருக்குல்ல

    சரி அதவிடுங்க ஜியோவில இருந்து வாட்ஸ்அப், லேண்ட் லைன், பேஸ் டைம் உள்பட பல ஆப்கள் இருக்கு இலவசமாக பேசிக்கொள்ள எனவே, இதை தெரிந்தவர்கள் 6 பைசா கட்டி பேச வேண்டிய அவசியம் ஏற்படாது. இன்டர்நெக் கனெக்ட் யூஸ் (Interconnect Usage Charge) கட்டணம் 14 பைசாவிலிருந்து நிமிடத்திற்கு 6 பைசாவாகக் குறைத்து கடந்த 2017ல் டிராய் அறிவித்தது. இது 2020 ஜனவரியில் முடிவடையும் என்று கூறியிருந்தது. ஆனால் இப்போது அதை நீட்டிக்கபோவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலைப்பாட்டை ஜியோ எடுத்துள்ளதாக தெரிகிறது.

    English summary
    Jio to charge users 6 paisa per min to rival phone networks in view of TRAI's review of IUC regime
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X