சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிக்கு.. இன்னும் எதற்கிந்த முகமூடி.. ஜோதிமணி பொளேர் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 20-12-2019 | Morning News | oneindia tamil

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளது அச்சு அசல் பாஜகவின் கருத்து. இன்னும் எதற்கிந்த முகமூடி என்று கேள்வி எழுப்பியுள்ளார் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

    போராட்டக்காரர்களை வன்முறையாளர்கள் என்ற தொணியில் ரஜினி பேசுவது முதன்முறையல்ல. எதற்கெடுத்தாலும் போராட்டம்னா நாடு சுடுகாடு ஆகி விடும் என்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களை விமர்சித்திருந்தார்.

    johtimani asks rajini to shed his bjp mask

    அதேபோல இப்போது குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடும் மாணவர்கள், சமூகத்தின் பல்துறையினர், பொதுமக்களைப் பார்த்து வன்முறை, போராட்டம் மூலம் எந்தத் தீர்வையும் அடைய முடியாது என்று பேசியுள்ளார்.

    கட்சியே ஆரம்பிக்காமல் இப்படி மக்கள் பக்கம் நிற்காமல், அரசின் குரலாக ரஜினி தொடர்ந்து எதிரொலித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப் பேசுவதன் மூலம் மக்களிடமிருந்து ரஜினி மேலும் அந்நியப்படுத்தப்படுவார் என்ற கருத்துக்களும் வெளிப்படுகின்றன.

    இந்த நிலையில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ரஜினி பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜோதிமணி போட்டுள்ள டிவீட்டில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்குப் பிறகு ரஜினி பேசியதன் மறுபதிப்பே இது.

    குடியுரிமைச் சட்டம்.. உங்க கருத்து என்ன.. அதைச் சொல்லுங்க.. ரஜினிக்கு சீமான் சுளீர் கேள்வி குடியுரிமைச் சட்டம்.. உங்க கருத்து என்ன.. அதைச் சொல்லுங்க.. ரஜினிக்கு சீமான் சுளீர் கேள்வி

    மக்களின் அடையாளங்கள், உரிமைகள், உணர்வுகள் அழித்தொழிக்கப்படுவதும், மாணவர்கள் மீது ஏவப்பட்ட அரச வன்முறையும் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல!

    அச்சு அசல் பிஜேபி கருத்து. இன்னும் எதற்கிந்த முகமூடி?! என்று அதிரடியாக கேட்டுள்ளார் ஜோதிமணி.

    English summary
    Karur Congress MP Jothimani has condemned actor Rajinikanth for his comments on protesting students and people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X